search icon
என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    • இந்தியா 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 161 ரன்னும், விராட் கோலி 100 ரன்னும் அடித்தனர்.

    534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 12 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 30-வது சதமாக பதிவானது. மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 10-வது சதம் இது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    • இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து, இன்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டம் போட்டியில், விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் .தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

    இதைதொடர்ந்து, இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

    இந்நிலையில், பெர்த் டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி விளாசிய சிக்ஸரில் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

    மைதானத்தில், நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலரின் தலையில் பந்து தாக்கியுள்ளது. இதில், காயம் அடைந்துள்ளார். இதைக்கண்ட சக ஆஸ்திரேலிய வீரர் பாதுகாவலரை ஆசுவாசப்படுத்தினர். 

    • 3 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது.
    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இதனையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டானிஸ் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
    • மேக்ஸ்வெல் 10,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    பிரிஸ்பேன்:

    பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

    இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 10,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்தச் சாதனையை படைத்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தத்தில் 16-வது வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் பெற்றுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

    இதுவரை 448 போட்டிகளில் பங்கேற்று 421 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் மொத்தம் 10,031 ரன்களை எடுத்து பேட்டிங் சராசரி 27.70 வைத்திருக்கிறார். இவற்றில் 7 சதங்களும், 54 அரை சதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் என்பதே இவருடைய அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும்.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்), ஆரோன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    • முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது.
    • மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

    அதில், முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்களை குவித்தார்.

    இதனையடுத்து, 94 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

    • பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    சிட்னி:

    பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தித்தாள்களில் இந்தியாவில் பேசப்படும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் அச்சிட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவின் டெய்லி டெலிகிராப் நாளிதழில், வரவிருக்கும் தொடரின் ஈர்ப்பைப் படம்பிடித்து காட்டும் வகையில், யுகங்களுக்காக போராடுங்கள் (யுகோன் கி லடாய்) என்கிற இந்தி தலைப்புடன் கோலியின் பெரிய புகைப்படத்தை அச்சிட்டுள்ளது. இதேபோல், ஹெரால்ட் சன் என்கிற நாளேடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோலியின் வாழ்க்கைப் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளது.

    மேலும், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பின்பக்கங்களை அலங்கரிக்கிறார்.

    தி ஹெரால்டு சன் முழு பக்கத்தையும் ஜெய்ஸ்வாலுக்கு ஆங்கிலத்திலும், பஞ்சாபியிலும் தி நியூ கிங் என தலைப்பு போட்டுள்ளது.

    டெய்லி டெலிகிராப், வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு இந்தியாவின் மிகவும் ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் என்று குறிப்பிடுகிறது

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் முக்கியமான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் அபாட் 30 ரன்கள் அடித்தார்.

    பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சலீம் அயூப் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லான்ஸ மோரீஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு கடைசியாக 2002ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது.
    • ஆஸ்திரேலியாவில் மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இரண்டு நாடுகள் பயணத்தின் அங்கமாக முதலில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது என்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் ரோமா சாலை பார்க்லேண்ட்ஸில் உள்ள மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் மதநல்லிணக்க செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை.
    • விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.

    சிட்னி:

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருபவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் விராட் கோலியுடன் மிக நெருக்கமாக நட்பு கொண்டுள்ளவர்.

    சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்றார். அப்போது அவர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் தன்னை பிளாக் செய்தது குறித்து பேசியதாவது:

    நான் ஆர்.சி.பி. அணிக்கு வருவது உறுதியானதும் எனக்கு மெசேஜ் செய்து விராட் கோலிதான் முதலில் வரவேற்றார். பிறகு அவருடன் இணைந்து நான் முகாமில் பயிற்சி செய்தேன்.

    நாங்கள் கலந்து பேசுவதற்கு சிறப்பான நேரங்கள் அமைந்தது. பிறகு நான் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை. அதற்கு முன் அவரை பாலோ செய்ய எனக்கு தோன்றவில்லை.

    இன்ஸ்டாகிராமில் அவருடைய பெயரை நான் தேடி கிடைக்காதபோது, ஒருவர் என்னிடம் விராட் கோலி உங்களை பிளாக் செய்திருந்தால் மட்டுமே அவருடைய பெயரை நீங்கள் தேடும் பொழுது கிடைக்காது என கூறினார்.

    விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.

    நான் இதை விராட் கோலியிடம் கேட்டபோது அதற்கு அவர், நீ டெஸ்ட் தொடரில் என்னிடம் கோபமாக நடந்துகொண்டாய். அதனால் உன்னை நான் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருக்கலாம் என சொன்னார்.

    அது நியாயமான காரணம் என நினைத்தேன். அதன்பின், அவர் மீண்டும் என்னை அன்பிளாக் செய்துவிட்டார். அப்போதிலிருந்து நாங்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த இரு விமானங்களும் நொறுங்கி விழுந்தன.
    • இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது மற்றொரு விமானம் மீது அந்த விமானம் மோதியது. இதனால் மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த இரு விமானங்களும் நொறுங்கி விழுந்தன. அப்போது அந்த விமானங்கள் தீப்பிடித்ததால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியது.

    இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் விமானிகள் உள்பட 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது உங்கள் நிலம் கியைாது, நீங்கள் என்னுடைய மன்னர் கிடையாது.
    • மீண்டும் எங்கள் நிலைத்தை கொடுங்கள். எங்களிடம் இருந்து கொல்லையடித்து சென்றதை எங்களிடமே கொடுங்கள்.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இன்று காலை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு சென்றார். அப்போது ஆஸ்திரேயலியாவின் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், மன்னர் சார்லஸ்க்கு எதிராக குரல் எழுப்பினார். அதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    "இது உங்கள் நிலம் கியைாது, நீங்கள் என்னுடைய மன்னர் கிடையாது. மீண்டும் எங்கள் நிலைத்தை கொடுங்கள். எங்களிடம் இருந்து கொல்லையடித்து சென்றதை எங்களிடமே கொடுங்கள் என முழக்கமிட்டார். அத்துடன் ஐரோப்பிய குடியேறிகளால் பூர்விக ஆஸ்திரேலியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்" என லிடியா தோர்ப் கூறினார்.

    ஆஸ்திரேலியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனியாக இருந்தது, அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டனர். பழங்குடியின சமூகங்கள் முழுமையாக இடம்பெயர்ந்தன.

    நாடு 1901-ல் சுதந்திரம் பெற்றது. ஆனால் ஒரு முழுமையான குடியரசாக மாறவில்லை. நாட்டின் தற்போதைய தலைவர் மன்னர் சார்லஸ் ஆவார்.

    1999-ம் ஆண்டு ராணியை நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், ராணிக்கு பதிலாக மாற்று நபரை மக்களால் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறைவான ஆஸ்திரேலியர்கள்தான் வாக்களித்திருந்தனர்.

    • ஒருவொரு சீட் இருக்கைகளுக்கு முன்னே பயணிகள் பொழுதுபோக்குக்காக டிவி மாட்டப்பட்டிருக்கும்.
    • PAUSE செய்து நிறுத்தவோ அல்லது மொத்தமாக ஆப் செய்வவோ முடியவில்லை

    ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் [Sydney] இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடா [Haneda] நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்னாஸ் [Qantas] QF59 விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

     

    ஒருவொரு சீட் இருக்கைகளுக்கு முன்னே பயணிகள் பொழுதுபோக்குக்காக டிவி மாட்டப்பட்டிருக்கும். அதில் தங்களுக்கு விருப்பமான படங்களை பயணிகள் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஆனால் அன்றைய தினம் பயணிகளால் படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அனைவரின் திரைகளிலும் ஆபாசப் படம் ஒளிபரப்பாகியுள்ளது.

    அதைப் பயணிகள் PAUSE செய்து நிறுத்தவோ அல்லது மொத்தமாக ஆப் செய்வவோ முடியாமல் இருந்ததால் பலருக்கு அசவுகரியமான சூழல் ஏற்பட்டுள்ளது.

     

    விமானத்தின் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக இது நடத்ததாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளதுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் ஆபாசப் படம் ஓடிய பிறகே பழுது சரிசெய்யப்பட்டு வேறு படங்களை மாற்ற முடிந்திருக்கிறது.

    இது குறித்து விமானத்தில் பயணித்த சில பயணிகள் இணையத்தில் பேசியதை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு கட்னாஸ் விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    ×