search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல மலையாளர் நடிகர் மேகநாதன் காலமானார்
    X

    பிரபல மலையாளர் நடிகர் மேகநாதன் காலமானார்

    • ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
    • 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார்.

    மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகர் மேகநாதன் காலமானார். அவருக்கு வயது 60. சுவாசக் கோளாறு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், பிரபல மலையாள நடிகர் பாலன் கே நாயர் மற்றும் சாரதா நாயர் ஆகியோருக்கு மூன்றாவதாக பிறந்தவர். மேகநாதன் 1983 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான 'அஷ்த்ரம்' மூலம் நடிகராக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். அவரது பன்முகத்தன்மைக்கு அங்கீகாரம் பெற்றார்.

    மேகநாதன் சென்னையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, கோவையில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றார். பின்னர் நடிப்பின் மீதான ஆர்வத்தால் திரைத்துறையில் பணியாற்றினார்.

    மேகநாதனுக்கு மனைவி சுஸ்மிதா மற்றும் மகள் பார்வதி உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×