என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு என்றால் என்ன... டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க உதவும் உணவுகள்
- ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.
- ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது. மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
முதல் வகை: இது விதைப்பையில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு. அவை விதைப்பைக்குள் கீழிறங்காத விதைகள், வழக்கமாக உள்ள எக்ஸ்-ஒய் குரோமோசோம்களுக்கு பதிலாக இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் காணப்படும் நிலை.
விந்தணுக்கள் உற்பத்தி செய்யும் செம்னிபெரஸ் குழல்களில் லீடிக் செல், டூபுலார் செல், செர்டோலை செல்கள் இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு செர்டோலை செல்கள் மட்டுமே காணப்படும். லீடிக் செல்கள் தான் டெஸ்டோஸ்டிரோனின் சீரான உற்பத்திக்கு காரணம்.
சிஸ்டிக் பைப்ரோசிஸ், தட்டம்மை நோயால் விதைகளில் ஏற்படும் தொற்று. விதைகளில் வரும் புற்றுநோய். ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.
இரண்டாம் வகை: ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி இவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்யும் மூளையின் பாகங்கள் ஆகும். ஹைபோதாலமஸ் கோனாடோட்ரோபினை வெளியிடும் ஹார்மோனை உருவாக்குகிறது.
இது பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சினைமுட்டை தூண்டுதல் ஹார்மோன் எப்.எஸ்.ஹெச் மற்றும் லுடினைசிங் ஹார்மோன் எல்.ஹெச் உருவாக்க சமிக்ஞை செய்கிறது.
லுடினைசிங் ஹார்மோன் பின்னர் லீடிக் செல்கள் மூலம் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்கிறது.
இரண்டாம் வகையில் பிட்யூட்டரி சுரக்கும் ஆண் இனப்பெருக்க ஹார்மோன்கள் குறைபாடு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கு காரணமாகிறது.
அறிகுறிகள்:
தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமை, விந்தணு குறைபாடு, முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பது, மார்பக திசுக்களின் வளர்ச்சி, எலும்பு நிறை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.
உணவுப் பழக்கவழக்கங்கள்:
டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் அசைவ உணவுகளில், நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி வகைகள், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்.
பருப்பு வகைகளில் பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள். பழங்களில், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்.
காய்கறிகளில் சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை நல்ல பலன் தரும்.
சித்த மருத்துவம்:
சாலாமிசிரி லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பின்.
மதன காமேஸ்வர லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, மாலை இரவு உணவிற்கு பின்.
நெருஞ்சில் விதை, பூனைக்காலி விதை, நீர்முள்ளி விதை, சாரப்பருப்பு, சாதிக்காய், நிலப்பனைக்கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, அமுக்கரா கிழங்கு, சதாவரி கிழங்கு இவை சேர்ந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்