என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி வசூல் செய்து கொடுத்த டிரைவர் தற்கொலை
- பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லரி மற்றும் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த வழக்கில் அதன் உரிமையாளர்கள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் (50) என்பவர், அவரது உறவினர்கள் உள்பட பலரிடம் மொத்தமாக ரூ.1 கோடி வரை வசூல் செய்து, ஏ.ஆர்.டி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஏ.ஆர்.டி. நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட தகவலறிந்ததும் பணம் கொடுத்த உறவினர்கள், பன்னீர் செல்வத்தை தகாதவார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, பணத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பன்னீர்செல்வம் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில், பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் பலர் போலீஸ் நிலையத்தில் ஒன்று கூடியதால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து அம்பத்தூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.