search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்போல் நடித்து இனிப்பு கடையில் பார்சல் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
    X

    போலீஸ்போல் நடித்து இனிப்பு கடையில் பார்சல் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

    • ரூ.35ஆயிரம் ரொக்கம், "வாக்கி டாக்கி" ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • பல இடங்களில் பணம் வசூலிதது மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் பிரபல நிறுவனத்தின் இனிப்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இங்கு போலீஸ் என கூறி வாலிபர் ஒருவர் தினசரி இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்களை ஓசியில் பார்சல் வாங்கி சென்றார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை ஊழியர் அருண்குமார் இதுபற்றி வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ்காரர் தம்பிதுரை இனிப்பு கடை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த அதே வாலிபர் கையில் "வாக்கி டாக்கி"யுடன் இனிப்பு கடைக்குள் சென்று வழக்கம் போல பார்சல் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அவர், போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டரின் மகன் ரமேஷ் (44) என்பது தெரிந்தது. போலீஸ் என்று கூறி பல இடங்களில் கைவரிசை காட்டிய அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.35ஆயிரம் ரொக்கம், "வாக்கி டாக்கி" ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து வரும் ரமேஷ் தீபாவளி பண்டிகையின் போது போலீஸ் என கூறி பல இடங்களில் பணம் வசூலிதது மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×