என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மும்பை வான்கடே டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன்னில் ஆல்அவுட்
- சுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சால் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் வில் யங் 71 ரன்னும், டேரில் மிட்செல் 82 ரன்னும் அடித்தனர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், ரோகித் சர்மா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 84 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
5-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். கில் 31 ரன்னுடனும், ரஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கில் நிதானமாக விளையாட ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 66 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருக்கும்போது உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது சுப்மன் கில் 70 ரன்னுடனும், ஜடேஜா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா மேலும் 4 ரன்கள் அடித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்பராஸ் கான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
8-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. சுப்மன் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்தியா 227 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் அடித்த வண்ணம் இருந்தார். அடுத்து வந்த அஸ்வின் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். கடைசி விக்கெட்டாக ஆகாஷ் தீப் களம் இறங்கினார். இந்தியா 250 ரன்களை கடந்தது.
263 ரன்கள் எடுத்திருக்கும்போது 2 ரன்கள் எடுக்க ஓடியபோது ஆகாஷ் திப் ரன்அவுட் ஆனார். இதனால் இந்தியா 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது வாஷிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்