search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Live Updates

    • 24 Nov 2024 7:18 PM IST

      தமிழக வீரர் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. அஷ்வினை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தள பதிவில், "திரும்ப வந்துடேன்னு சொல்லு", "நாயகன் மீண்டும் வரார்" என பதிவிட்டுள்ளது. 

    • 24 Nov 2024 7:17 PM IST

      மார்கஸ் ஸ்டோனிஸை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்.

      அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

    • 24 Nov 2024 7:14 PM IST

      வெங்கடேஷ் அய்யரை ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

    • 24 Nov 2024 7:04 PM IST

      ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

      அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

    • 24 Nov 2024 6:55 PM IST

      ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

    • 24 Nov 2024 6:50 PM IST

      ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

      அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

    • 24 Nov 2024 6:45 PM IST

      ஜேக் ஃப்ரேஸர்-மெக்கர்க்கை ரூ.9 கோடிக்கு ஆர்டிஎம் முறையில் ஏலம் எடுத்தது டெல்லி.


    • 24 Nov 2024 6:38 PM IST

      ராகுல் த்ரிபாதி ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

      அடிப்படை விலை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.3.40கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

    • 24 Nov 2024 6:35 PM IST

      டெவன் கான்வே ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

      அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

    • 24 Nov 2024 6:32 PM IST

      தேவ்தத் படிக்கலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 

    Next Story
    ×