search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றி ஆர்வம்: புனேயுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி 'லீக்' தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றி ஆர்வம்: புனேயுடன் இன்று மோதல்

    • இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்- மும்பை அணிகள் மோதுகின்றன.
    • புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்று உள்ள இந்தப் போட்டியில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடப்பு சாம்பியன் புனேரி பல்தானை சந்திக்கிறது. புனேயை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையுடன் இருக்கிறது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. குஜராத் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    Next Story
    ×