search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் திடீர் தர்ணா- அ.தி.மு.க.வினர் பங்கேற்பு
    X

    ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் 'திடீர்' தர்ணா- அ.தி.மு.க.வினர் பங்கேற்பு

    • கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
    • 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45 ஆயிரம் ஏக்கர், மேலூர் ஒருபோக பாசனத்திற்கான 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர்திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய ௩ பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்திட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 கண்மாய்கள், 110 கிராமங்கள் மற்றும் 5 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. விவசாயம், குடிநீர், கால்நடை தேவைக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    தற்போது போராட்டம் நடத்தி வருகிற பாசன விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் மதுரை மாவட்ட கலெக்டர் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×