என் மலர்
புதுச்சேரி
- உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
- 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது.
புதுச்சேரி:
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து, உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்டத்தில் கபடி போட்டி, பீச் வாலிபால் போட்டி, மணல் சிற்பம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதன் தொடக்க நிகழ்வாக, நேற்று காலை, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற சுற்றுலாத்துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் வினாடி- வினாடி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேகா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
- இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்
- 7-வது நாளாக பாண்டி மெரினா கடற்கரை ஓரத்தில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் 7-வது நாளாக பாண்டி மெரினா கடற்கரை ஓரத்தில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடா ஜலபதி கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இதில் 2 டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டது. இதனை நகராட்சி அதிகாரி துளசிரா மனிடம் ஒப்படைத்தனர்.
இந்தத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளிடமும், பார்வையாளர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி
- ழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைக்கவும், புதிய கிணறுகள் அமைக்க வும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2020- 21-ம் ஆண்டு புயல் காரணமாக விவசாய பயிர்கள் மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இதற்கு பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் 437 விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி காரைக்கால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட விவசாயிகளை அலுவல கத்திற்கு வரவழைத்து அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா ஆகியோர் பேசினர். பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் குலோ த்துங்கன், வேளாண்துறை செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுபட்ட விவசாயி களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.மேலும் காரைக்கால் மாவட்டத்தில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைக்கவும், புதிய கிணறுகள் அமைக்க வும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
இதனை ஏற்று விவசாயி கள் போராட்ட த்தை கைவிட்டனர்.
- அங்காளன் எம்.எல்.ஏ. அறிவிப்பு
- தண்ணீர் குழாய் அமைக்கும் பணி மதகடிப்பட்டு திருபுவனை திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் விடுபட்டுள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டில் இருந்து திருபுவனை திருவாண்டார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 4 வழி சாலை விரிவுபடுத்துப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை பணி பொதுமக்களுக்கு நல்லது என்றாலும் இந்த பணியால் திருபுவனை தொகுதிக்குட்பட்ட பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக தண்ணீர் குழாய் அமைக்கும் பணி மதகடிப்பட்டு திருபுவனை திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் விடுபட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலையின் இரு புறமும் கிராமப்புற ங்களுக்கு செல்லும் இணைப்பு சாலை துண்டிக்கப்ப ட்டதால் போக்குவரத்து இடையூறாகவும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, மின்துறை உதவி பொறியாளர் அலுவலகம், விவசாய பண்ணை மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களை சந்திக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பணி நடைபெறவில்லை.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் புதுச்சேரியில் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் பொறியாளர்கள் நேரில் சென்று மேல் குறிப்பிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து தருகிறோம் என்று உறுதி கூறினர்.
ஆனால் இதனால் வரை அப்பணியை செய்து முடிக்கவில்லை இதனால் இப்பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்காவிட்டால் தொகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மறியல் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும்
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இலவசமாக வழங்கி மக்கள் சேவை செய்து வரும் இளங்கோ லட்சுமி ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
- சங்கத் தலைவர் கே.கே. சாமி என்ற கருப்புசாமி தொகுத்து வழங்கினார் முடிவில் முத்தமிழ் கலைச்சங்கமம் செயலாளர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தமிழ் கலை சங்கமம் சார்பில் அதன் நிறுவனர் ஆனந்தராஜ் ஏற்பாட்டின் பேரில் வ.உ.சி. பிறந்த நாள் விழா புதுவை தமிழ்ச்சங்க த்தில் கொண்டா டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ்ச்சங்கத்தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜர், மதுரையை சேர்ந்த டி.பி.ராஜேந்திரன், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் மற்றும் புதுச்சேரியில் வாரம் இருமுறை சுமார் 1000 பொதுமக்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கியும், சுமார் 2 டன் மதிப்புள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் சேவை செய்து வரும் இளங்கோ லட்சுமி ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜர் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் புதுவை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஆதிகேசவன், செயலாளர் சீனு. மோகன்தாஸ் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியை புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கத் தலைவர் கே.கே. சாமி என்ற கருப்புசாமி தொகுத்து வழங்கினார் முடிவில் முத்தமிழ் கலைச்சங்கமம் செயலாளர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.
- அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- 2023-24 இறுதி ஆண்டு இளங்கலை பொறியியல் துறை மாணவ-மாணவி கள் 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் சென்னை ரெனால்ட் நிசான் டெக் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகா மிற்கு அந்நிறுவ னத்தின் மனிதவளத்துறை மேலா ளர்கள் ராமசாமி, ஸ்ரீகாந்த் குழுவினர் முன்னிலையில் ஆன்லைன் எழுத்து தேர்வு, மற்றும் நேர் குழு விவாதம் முகத்தேர்வு ஆகிய சுற் றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு னர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மணக்குள கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீம ணக்குள விநாயகர் பொறி யியல் கல்லூரி, மற்றும் புதுவை, கடலூர், விழுப்பு ரம் நகரை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பொறியி யல் கல்லூரிகளிலிருந்து 2023-24 இறுதி ஆண்டு இளங்கலை பொறியியல் துறை மாணவ-மாணவி கள் 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
ஏற்பா டுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் புது நகரை சேர்ந்தவர் சீனுவாசன் இவரது மனைவி தவமணி வயது37) இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனுவாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தவமணி புதுவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து குடும்பம் நடத்தி வருகிறார்.
இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் குமார் வயது 52) இவர் தவமணி வேலைக்கு செல்லும் போதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் முறைத்து பார்த்து ஜாடைமாடையாக திட்டுவதை வழக்கமாகிக்கொண்டு வந்தார். இதனை தவமணி குமாரின் மனைவி மற்றும் அவரது மைத்துனரிடம் முறையிட்டார்.
ஆனாலும் குமார் அதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தவமணியிடம் வம்பு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தவமணி வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்ட போது குமார் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நின்று கொண்டிருந்தார். இதனை தவமணி தட்டிக்கேட்ட போது அவரை தகாத வார்தைகளால் திட்டி அங்கு கிடந்த கல்லால் தவமணியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தவமணி அருகில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ் பாடத்துக்கான 4 பருவ தேர்வுகளை 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- தமிழ் பாடத்தேர்வை குறைக்கும் முடிவை கைவிட்டு ஏற்கனவே இருந்து வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ் பாடத்துக்கான 4 பருவ தேர்வுகளை 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழி அறிவை மேம்படுத்துவதற்கு குந்தகம் விளைவிக்கும் எனவே புதுவை பல்கலைக்கழகமும் புதுவை அரசும் தமிழ் பாடத்தேர்வை குறைக்கும் முடிவை கைவிட்டு ஏற்கனவே இருந்து வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பின்னர் வந்து பார்த்த போதுமோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு குமரன் நகரை சேர்ந்தவர் சங்கர்ராஜ் (வயது 25) இவர் தனியார் தனியார் டிராவல்சில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மதியம் இவர் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் வந்து பார்த்த போதுமோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் ராஜ் சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பார்த்திபன் காரைக்காலில் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மலர்விழியை தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி மலர்விழி வயது 34) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பார்த்திபன் காரைக்காலில் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன் தினம் பார்த்திபன் காரைக்காலில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணியளவில் மலர்விழி கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மலர்விழி இல்லை. இதையடுத்து பார்த்திபன் தனது மனைவி மாயமானது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மலர்விழியை தேடிவருகிறார்கள்.
- அவ்வழியே செல்பவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
- தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
பாகூர்-பரிக்கல்பட்டு ரோட்டில் ஒரு தனியார் மதுப்பானக்கடை எதிரே ஒரு வாலிபர் மது குடித்துவிட்டு அவ்வழியே செல்பவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிதம்பரம் வல்லம் படுகை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் 29 என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.