search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் ஹீரோ?
    X

    குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் ஹீரோ?

    • குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அறிமுகம் செய்யும் என தகவல்.
    • வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது அந்நிறுவன தலைமை அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

    என்ட்ரி லெவல் பிரிவில், குறைந்த விலை மாடல், மிட் ரேஞ்ச் மாடல் உள்ளிட்டவைகளால் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த உள்ளதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் ஹீரோ நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அறிமுகம் செய்து, அதன்பிறகு மிட் ரேஞ்ச் மாடலை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் விடா வி1 பிளஸ் மாடலை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    தற்போது இந்திய சந்தையில் ஓலா நிறுவனம் மட்டும்தான் குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (S1 X) விற்பனை செய்கிறது. இதைத் தொடர்ந்து பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்கள் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

    ஹீரோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தற்போதுள்ள மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×