search icon
என் மலர்tooltip icon

    OTT

    பகத் பாசில் நடித்த Bougainvillea  படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
    X

    பகத் பாசில் நடித்த Bougainvillea படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

    • மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் பேட்டரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தன் நினைவுகளை மறக்கும் ஒரு பெண் அவளுக்கும் காணாமல் போன பெண்களுக்கு உள்ள தொடர்பை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது.

    ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்நடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×