search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் டி20 உலக கோப்பையை வெல்வது யார்? - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
    X

    மகளிர் டி20 உலக கோப்பையை வெல்வது யார்? - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

    • டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
    • இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது.

    கேப் டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    கேப்டவுனில் நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கேப் டவுனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடக்கும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது. இதேபோல், உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆவலில் தென் ஆப்பிரிக்காவும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டி சவாலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    Next Story
    ×