search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விந்தையான நமஷ்கார காணிக்கை
    X

    விந்தையான நமஷ்கார காணிக்கை

    • பிறகு நாளுக்கு நாள் அதிக பைசாவாக உயர்ந்தது. பிறகு ரூபாய் கணக்கில் பெற ஆரம்பித்தார்.
    • இவ்வாறு தாம் பெறும் காணிக்கையை அவ்வப்பொழுதே மற்றவர்க்கு தந்துவிட்டு மீண்டும் காசின்றியே இருப்பது சாயிபாபாவின் வழக்கம்.

    சீரடி சாயிபாபா வாழ்ந்த காலம் 1840 முதல் 1918 வரையில் என்று கூறுவதுண்டு.

    இன்று ஒரு குறிப்பிட்ட நிலை வரையில் பணத்திற்கு மதிப்பு மிகவும் குறைவு.

    ஆனால், அந்தக் காலத்தில் அரையணா, ஓரணா காசுகள் இருந்து உள்ளது.

    ஒரு மனிதனுடைய சம்பளம் 15 ரூபாய் முதல் பதவிக்கு தக்கவாறு சம்பளம் இருந்துள்ளது.

    முதல் முதலில் சாயிபாபா யாரிடமும் காணிக்கையை பெறாமல் இருந்தார்.

    ஒரு முறை காசிநாத் என்ற பக்தர் பணக்கொடை கொடுக்க, பாபா அதை ஏற்க மறுத்தார்.

    இப்படி அவர் மறுத்ததைப் பார்த்த காசிநாத் கண்ணீர் வடித்துத் துயருற்றார். அந்தக் காட்சியை கண்டு பொறுக்காத சாயிபாபா தட்சிணை பெற ஆரம்பித்தார்.

    முதலில் இரண்டு பைசா மட்டுமே ஏற்றார்.

    பிறகு நாளுக்கு நாள் அதிக பைசாவாக உயர்ந்தது. பிறகு ரூபாய் கணக்கில் பெற ஆரம்பித்தார்.

    இவ்வாறு தாம் பெறும் காணிக்கையை அவ்வப்பொழுதே மற்றவர்க்கு தந்துவிட்டு மீண்டும் காசின்றியே இருப்பது சாயிபாபாவின் வழக்கம்.

    ஒரு நாள் சீரடிபாபா, தபோல்கரிடம் ''நீ, ஷாமாவிடம் சென்று பதினைந்து ரூபாய் தட்சிணையாகப் பெற்றுக் கொண்டு வா'' என்று கூறி அனுப்பினார்.

    தபோல்கர், ஷாமா வின் இல்லத்திற்குச் சென்று சாயிபாபா தம்மை அனுப்பியதன் காரணத்தைக் கூறினார்.

    ஷாமாவோ பரம ஏழை. அதனால் அவர் ''நான் பரம ஏழை என்பது சாயிராமுக்கு தெரியும், என்னால் பதினைந்து ரூபாயை எவ்வாறு தர முடியும்? பதினைந்து ரூபாய்க்குப் பதிலாக பதினைந்து நமஸ்காரங்களைத் தருகிறேன் என்று அவரிடம் கூறுக'' என்று கூறி அனுப்பினார்.

    தபோல்கர் சாயிபாபாவிடம் சென்ற பொழுது சாயிபாபா ''ஷாமா காணிக்கையாக எதைக் கொடுத் தாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறி அவரை அழைத்து வா'' என்று கூறினார்.

    தபோல்கர் ஷாமாவிடம் சென்று ''சாயி நீங்கள் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளுவதாக கூறி உங்களை அழைத்து வரும்படி கூறினார்'' என்று கூற, தபோல்கருடன் ஷாமா மசூதிக்கு வந்து பலரும் கூடியிருந்த நேரத்தில் பதினைந்து முறை நமஸ்காரம் செய்தார்.

    ஷாமா பதினைந்து நமஸ்காரங்களை அன்புடன் காணிக்கையாக சாயிபாபாவுக்கு சமர்ப்பணம் செய்ய, அவரும் அன்புடன் அதை ஏற்றுக் கொண்டார்.

    Next Story
    ×