search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இதய நோயாளிகளுக்கு செய்யப்படும் பேஸ் மேக்கர் சிகிச்சை
    X

    இதய நோயாளிகளுக்கு செய்யப்படும் பேஸ் மேக்கர் சிகிச்சை

    • பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?
    • இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும்.

    பேஸ் மேக்கர் சிகிச்சை என்பது இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும் மெட்டல் கருவி ஆகும். ஒரு மனிதனின் இதயம் 60-ல் இருந்து 100 என்ற அளவில் இருக்கும். இதுவே ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ அதிகமாக இருக்கும்.


    இதேபோல் இதயத்துடிப்பு 32-ல் இருந்து 30 வரையிலான இதயத்துடிப்பு இருப்பவர்களுக்கு பேஸ் மேக்கர் மிகவும் அவசியம். இவர்களுக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை செய்யப்படுகிறது.

    இதயநோயாளிகள் பேஸ்மேக்கர் சிகிச்சை பொருத்தியதாக சொல்வதை கேள்வி பட்டிருப்போம். பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?

    ஆஞ்சியோகிராமுக்கு செய்வது போல கையில் உள்ள சிரையின் மூலமோ கழுத்து எழும்பின் பின் உள்ள சிரையின் மூலமோ ஒரு மெல்லிய குழாய் வழியாக மின் இணைப்பு கம்பியை இதயத்தின் மேல் அறைகளின் தடுப்பு சுவரை தொடும்படியாகவோ அல்லது வலதுபுற கீழறையின் மூலையிலோ பொருத்துவார்கள். இதன் வெளிநுனியை தீப்பெட்டி அளவிலான பேட்டரியுடன் பொருத்துவார்கள்.

    நோயாளி ஆண் என்றால் அவரது கழுத்து எலும்புக்கு கீழ் தோலுக்கடியிலும், பெண்ணாக இருந்தால் மேல் வயிற்று தோலுக்கு அடியிலும் பொருத்தப்படும்.

    இதயத்துக்கு தேவையான மின்சக்தியை தேவையான நேரத்தில் செலுத்தும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு நோயாளி வீடு திரும்புவார். இதனை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    இந்த கருவியானது இதயத்தை மீண்டும் சரியாக துடிக்கும்படி மின் தூண்டலை ஏற்படுத்துகிறது. ஈசிஜி மெஷினில் இணைத்து பதிவுகளை காகிதத்தில் வரைபடமாக பெறலாம்.


    அதேபோல் இந்த பேஸ்மேக்கர் பேட்டரியின் ஆயுள் இவற்றையும் சரிபார்க்க முடியும். சாதாரணமாக பேட்டரியின் ஆயுள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒவ்வொருவரின் இதயத்தின் மின்தூண்டல் தேவையை பொறுத்து அதிகமாக வேலை செய்தால் குறையலாம்.

    பேட்டரி ஆயுள் குறையும் போது சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய பேட்டரியை அகற்றிவிட்டு புதிய பேட்டரியை பொருத்த முடியும்.


    மேலும் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் ஏதாவது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது மாரடைப்பு வர சாத்தியக்கூறுகள் இருப்பதாக பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தாலோ தவிர மற்றவர்கள் மாதிரி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

    ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பித்தவறிக்கூட காந்த சக்தி உள்ள பொருட்களின் அருகில் செல்லக்கூடாது.

    இந்த கருவி பொருத்தப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் ஒரு சான்றிதழ் தருவார்கள் அதை பயணங்களின் போது கூடவே வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் பயணங்களின் போது பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யாமல் இருப்பதற்கு இந்த சான்றிதழ் உதவும்.

    ஆனாலும் இது வயதானவர்களுக்கே அதிகமாக தேவைப்படுகிறது.

    Next Story
    ×