என் மலர்
பொது மருத்துவம்
- டென்ஷனும், கோபமும் எப்போதும் சேர்ந்தே வரும்.
- மனதை ஒருநிலைப்படுத்த தியானம் மேற்கொள்ளுங்கள்.
* தலைவலி, ரத்த அழுத்தம், அஜீரணம் மற்றும் இதர வயிற்று பிரச்சினைகள், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும்.
* டென்ஷனும், கோபமும் எப்போதும் சேர்ந்தே வரும். இரண்டும் சேர்ந்து வாழ்க்கையை குழப்பத்தின் எல்லைக்கு கொண்டுபோய், நிம்மதிக்கு உலைவைத்துவிடும்.
* டென்ஷன் இன்றி வாழ விரும்புகிறவர்கள் முதலில் எதிர்மறையான எண்ணங்கள், பயத்தில் இருந்து அகன்று, எதையும் பாசிட்டிவ்வாக சிந்திக்கவேண்டும்.
* பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் எங்கே என்றாலும் உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் மேற்கொள்ளுங்கள்.
* காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு 'இன்று முழுவதும் நான் அமைதியாக செயல்படுவேன்' என்று திரும்பத் திரும்ப கூறி, அதை உங்கள் ஆழ்மனதில் பதிவு செய்யுங்கள்.
* அடுத்தவர்களின் பிரச்சினைகளில் போய் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். மற்றவர்களை குறை சொல்வதையும் தவிர்த்திடுங்கள். மற்றவர்களை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டாலே, உங்கள் டென்ஷனில் பாதி குறைந்துவிடும்.
* நீங்கள் எளிதில் டென்ஷன் ஆகிவிடக்கூடியவராக இருந்தால், உங்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிடுவார்கள். தேவையற்ற வார்த்தைகளை பேசி, உங்கள் அருகில் இருப்பவர்களையே உங்களுக்கு எதிரியாக்கிவிடுவீர்கள்.
* பதற்றம் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, மூளை நரம்புகளை பாதித்து உங்கள் இயக்கத்திற்கே தடை போட்டுவிடும். நாளடைவில் இது பக்கவாதமாக மாறும்தன்மை கொண்டது.
* டென்ஷன் ஏற்படும்போது கண்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து சில முறை செய்தால் டென்ஷன் குறையும். இதன் மூலம் நீங்கள் இயல்பு நிலைக்கு வரலாம்.
- மனச்சோர்வு பிரச்சினைகள் தலைதூக்கும்.
- உடலின் உற்சாகம் குறையும்
இரவு இரண்டு மணிவரை வீடியோ கேம் விளையாடும் நபரும், புராஜெக்ட் வேலை காரணமாக அதிகாலை தூங்கச்செல்லும் நபரும் இரவில் தூங்காமலிருந்தால் பிரச்சினை ஒன்றுதான். முதலில் உடலின் உற்சாகம் குறையும்; அடுத்ததாக மனச்சோர்வு பிரச்சினைகள் தலைதூக்கும்.
எந்த வேலையும் செய்யாமல் உடலை ஓய்வாக சாய்த்திருப்பதை தூக்கமாக கருதினால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். தூங்கும் நேரம் மட்டுமே உடல் தனது பிரச்சினைகளை சரி செய்து உயிர்ப்பித்துக் கொள்கிறது. தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
5 மணிநேரங்களுக்குக் குறைவாக தூங்குபவர்களுக்கு 15 சதவிகித ஆயுள் குறையும். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகரித்து ரத்த அழுத்தம் உயருவதால் கண்களின் கீழ் கருவளையம், பைபோலார் டிஸார்டர், குளுக்கோஸ் அளவு குறைவு (இரண்டாம் நிலை நீரிழிவுநோய்), தீராத தசைவலி ஆகியவை தூக்கமிழப்பின் தவிர்க்கமுடியாத அறிகுறிகளாக உருவாகின்றன.
- பலாப்பழ கொட்டைகளில் இரும்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
- பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது.
பலாப்பழத்தை போலவே அதன் கொட்டைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை. அதிலிருக்கும் தையமின் மற்றும் ரிபோ பிளேவின் போன்றவை சருமம், கண்கள், கூந்தலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த துணைபுரிகின்றன. சாப்பிடும் உணவுகளில் பாக்டீரியாக்கள் மூலம் பரவும் மாசுவை தடுக்கவும் உதவுகின்றன. செரிமான பிரச்சினைகளை போக்கும் தன்மை கொண்ட இவை பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்கும் பலாப்பழ கொட்டைகள் உதவுகின்றன.
குளிர்ந்த பாலில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டைகளை சிறிது ஊற வைத்துவிட்டு விழுதாக அரைத்து சருமத்தில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் சரும சுருக்கம் நீங்கும்.
சரும பளபளப்புக்கும் பலாப்பழ கொட்டைகளை பயன்படுத்தலாம். பலாப்பழ கொட்டைகளை சிறிதளவு பால் மற்றும் தேனில் ஊறவைத்து அரைத்து பசைபோல் ஆக்கி, முகத்தில் தடவி உலர வைத்து வெது வெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும்.
பலாப்பழ கொட்டைகளில் புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதற்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க செய்வதிலும், கூந்தலின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது.
பலாப்பழ கொட்டைகளில் இரும்பு சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. அது அன்றாடம் நமது உடலுக்கு தேவைப்படும் இரும்பு சத்தின் அளவை ஈடு செய்யும் தன்மை கொண்டது. மேலும் ரத்த சோகை மற்றும் ரத்தம் சார்ந்த நோய் பாதிப்பில் இருந்தும் காக்க உதவும். மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும்.
பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. அது பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும். மாலைக்கண் பாதிப்பு வராமலும் காக்கும். முடி உதிர்வும் கட்டுப்படும்.
ஜீரண கோளாறு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அளவோடு பலாப்பழ கொட்டைகளை சாப்பிடலாம். அதனை வெயிலில் நன்கு உலர்த்தி தூளாக்கி வேகவைத்து சாப்பிடலாம். இது மலச்சிக்கலை போக்கும்.
பலாப்பழ விதைகளில் உயர்தர புரதங்களும் உள்ளன. அவை தசைகளின் வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகின்றன.
- சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம்.
- செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின்-டி அவசியமானதாகிறது.
வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்கொண்டது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ, சுட்டோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம்.
வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
- தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
- முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன.
பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவையாலும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன. 4,5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும்.
முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது போன்ற பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன, ஒருவேளை இந்த பாதிப்புகள் வந்தால் சிகிக்சை அளித்து விரைவாக முதியவர்களை உடல்நலம் பெற வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முறைகள் பற்றித்தான் இந்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்ெவாரு ஆய்வு முடிவும் சாதகமான நிலையை எட்டும்போது, புதிய சிகிச்சைகள் மருத்துவ உலகில் அறிமுகம் ஆகிக்கொண்டிருகின்றன.
- மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை
- கோதுமை உணவுகளை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம்.
மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர்.
மைதா வகை உணவுகளில் அதிக அளவு 'கிளைசெமிக் இன்டெஸ்' என்ற பொருள் இருப்பதால், இதனை அதிகம் எடுத்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்துடன் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன், இதய கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை என்பதால் மலசிக்கல் பிரச்சினை உண்டாகும். மைதா உணவுகளில் ஏராளமான ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் இருப்பதால் இவற்றை உட்கொள்ளும் போது செரிமான கோளாறு ஏற்படும்.
இதனை தவிர்த்து கோதுமை உணவுகளை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம். இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இதய கோளாறு, ரத்த குழாய் அடைப்பு போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது என்பதால் இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.
- ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.
ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் கிளைசமிக் இன்டக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசமிக் லோடு (கிளைசமிக் சுமை) குறைவாக உள்ள பழங்களை தாராளமாக உண்ணலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம்,அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணலாம்.
சர்க்கரை நோய்க்கும் குதிகால் வலிக்கும் தொடர்பு உண்டு. நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத பொழுது குதிகால் வலி ஏற்படலாம்.
இதற்கு முக்கிய காரணம் 'பிளாண்டர் பேசியைடிஸ்'. குதிகால் எலும்பில் பிளாண்டர் பேசியா இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு குதிகால் வலி உண்டாகலாம். மேலும் சர்க்கரை நோயாளிகள் குதிகால் உயரமான காலணிகள் மற்றும் கூம்பு வடிவ ஷூக்களை அணியக்கூடாது.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உடலில் உள்ள எதிர்ப்பு தன்மை சார்ந்த ஒரு வைத்திய முறை.
- ஒன்று முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
மதுரை உத்தங்குடி சாஸ்தா கிட்னி மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியின் சேர்மனும், சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர் பழனிராஜன் கூறியதாவது:-
நாள்பட்ட சிறுநீரக செயல் இழப்பிற்கு தொடர் டிஅலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை இரண்டுமே பரவலாக நடைமுறையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக டிஅலிசிஸ் சிகிச்சை என்பது அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கின்றது. டிஅலிசிஸ் செய்து கொள்பவர்களில் சுமார் ஒன்று முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
இந்த குறைவான எண்ணிக்கைக்கு பல்வேறு விதமான மருத்துவ, பொருளாதார, மற்றும் குடும்ப காரணங்கள் உள்ளது அனைத்தும் நாம் அறிந்ததே. அவற்றை பற்றி நாம் இங்கு விவாதிக்க போவதில்லை. ஏனென்றால் அவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். நாம் இங்கு பார்க்க போவது ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து வசதி வாய்ப்புகள், சிறுநீரக தானம் தருவதற்கான டோனோர் தயாராக இருந்தும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத ஒரு ஆபத்தான சூழ்நிலை பற்றியதே.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உடலில் உள்ள எதிர்ப்பு தன்மை சார்ந்த ஒரு வைத்திய முறை. எந்த ஒரு தனி நபரின் உடலில் உள்ள செல்களும் அவரவரின் மரபணுக்களுக்கு ஏற்ப தனி அடையாளம் கொண்டிருக்கும். ஒரே போல தோற்றம் கொண்ட இரட்டையருக்கு கூட மரபணுக்களின் உண்டாகும் செல்கள் முழுவதும் பொருந்திருக்காது. அப்படி இருக்கும் போது, நெருங்கிய உறவினர் என்னும் தாய், தந்தை, சகோதர உறவுகளுக்கு 50 சதவீத பொருத்தம் மட்டுமே இருக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு தன்மை தன்னுடைய செல்களை தவிர வேறு எந்த செல்கள் உடலுக்குள் வந்தாலும் அவற்றை கண்டறிந்து பின்னர் அந்த செல்களுக்கு எதிராக ஆன்டிபாடிஸ்யி உருவாக்கி அவற்றை கொன்று விடும். அதனால் தான் நாம் நம்மை தாக்கும் பல்வேறு கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றி ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடிகின்றது. இந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு உடலுக்குள் வரும் எல்லாமே அது கிருமியாக இருந்தாலும் அல்லது மாற்று உறுப்பு கிட்னியாக இருந்தாலும் ஒரே விதமான நிகழ்வு தான்.
புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகங்களை, அதன் செல்களை கண்டறிந்து அதற்கான எதிர்ப்பு பொருட்களை உருவாக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அந்த சிறுநீரகத்தை அழித்து விடும். இதற்கு ரெஜெக்ஷன் என்று பெயர். இந்த ரெஜெக்ஷன் உடலுக்குள் சிறுநீரகம் பொருத்திய 3-5 நாட்களுக்கு பின் தான் மெல்ல, மெல்ல தூண்டப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு உடலில் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தி புதிதாக பொருத்திய சிறுநீரகங்களை முற்றிலுமாக அழித்து விடும்.
சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படும் மிக முக்கிய சக்தி வாய்ந்த மருந்துகள் இந்த எதிர்ப்பு தன்மையை கட்டுப்படுத்தி சிறுநீரகங்கள் தொடர்ந்து நல்லமுறையில் செயல்பட வைக்கின்றன. இந்த புதிய மாற்று சிறுநீரகம் உடலுக்குள் பொருத்துவதற்கு முன்னரே அந்த நபரின் உடலில் ஒருவேளை எதிர்ப்பு, பொருட்கள் உருவாகி இருந்தால் என்ன நடக்கும். அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் உடல் அந்த மாற்று உறுப்பை எதிர்த்து அழித்து விடும்.
இதற்கு ஹைப்பர் ஆக்டிவ் ரெஜெக்ஷன் என்று பெயர். இது போன்ற ஒரு எதிர்ப்பு தன்மை ஒருவர் உடலில் ஏற்பட்டால் அவர் எப்போதும் தன்னுடைய எதிர்ப்பு தன்மை தூண்டப்பட்ட நிலையிலேயே இருக்க நேரிடும். இதனை கிராஸ் மேட்ச் என்ற பரிசோதனை மூலம் அறுவை சிகிச்சைக்கு முன்பே கண்டறிந்து இது போன்ற ஒரு ஆபத்தை தவிர்க்க முடியும். ஆனால் இந்த கிராஸ் மேட்ச் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியாத வேறு ஒரு எதிர்ப்பு தன்மையும் உண்டு. இது போன்று தூண்டப்படும் எதிர்ப்பு தன்மை வாழ்நாள் முழுவதும் நிலை பெற்று விடுவதால் அந்த நபரால் எப்போதும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாது. டிஅலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பின் ஒரு வெளிப்பாடாக ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிகப்பு அணுக்கள் குறைபாடாக இருக்கும். இதனை அதற்கான ஊசிகள் மூலம் மட்டுமே குணப்படுத்த வேண்டும்.
மாறாக பல சந்தர்ப்பங்களில் ரத்தம் ஏற்றப்படுகிறது. சில சமயங்களில் 3 மாத இடைவெளிகளில் அடிக்கடி ரத்தம் ஏற்றப்படும் ஒரு சூழ்நிலையும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு செயல் ஆகும். இது போல் ஏற்றப்படும் ரத்தம் சில சந்தர்ப்பங்களில் உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டி விட்டு அவர்களால் மாற்று உறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு நிலையை உண்டாகும். சமீபத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக வந்தவர்களில் 5 நபர்களுக்கு இது போல ஒரு தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலம் ஏற்பட்டு தற்போது மட்டும் அல்ல எப்போதுமே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழலில் உள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே டிஅலிசிஸ் சிகிச்சையில் ரத்தம் ஏற்றி கொள்வது என்பது உடலுக்கு நல்லது செய்யும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று தவறாக எண்ணாமல் அதன் ஆபத்தை உணர்ந்து தவிர்ப்பதே நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பசி உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
- வேகமாக சாப்பிடுவது சட்டென்று பசியை போக்கிவிடும்.
உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உண்ணும் உணவில் இருந்துதான் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. சில மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் பசி ஏற்படுவது இயல்பானது. ஆனால் சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு இருந்துகொண்டிருந்தால் உடல் நலனில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் எப்போதுமே பசியுடன் இருப்பதாக உணர்ந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மன அழுத்தம்: அதிகப்படியான பசி உணர்வுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பதற்றமாக இருக்கும்போது கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அது பசி உணர்வை தூண்டிவிடும்.
புரத உணவு: உடலில் இருந்து எரிக்கப்படும் கலோரிகளுக்கும் குறைவான கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொள்வது கிரேலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். இது பசி ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. உடலுக்கு அதிக உணவு தேவைப்படும்போதெல்லாம் வயிற்றில் இருந்து இந்த ஹார்மோன் வெளியாகும். அந்த சமயத்தில் குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொள்வது கிரேலின் உற்பத்தியை அதிகரித்துவிடும். சாப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பசி எடுக்க தொடங்கிவிடும். குறைந்த அளவு நார்ச்சத்து, கொழுப்பு, புரதம் கொண்ட உணவுகளை உட்கொள்வதும் பசியை தூண்டிவிடும்.
சாப்பிடும்போது கவனச்சிதறல்: சிலர் சாப்பிடும்போது ஏதாவதொரு சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள். சத்தான உணவை உண்டாலும் கூட கவன சிதறலுக்கு இடம் கொடுத்தால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது டி.வி, செல்போன் பார்ப்பதும் நல்ல பழக்கம் அல்ல. அந்த பழக்கம் சாப்பிட்ட பிறகு பசி உணர்வை தூண்டி விட்டுவிடும்.
தூக்கமின்மை: நன்றாக சாப்பிடாவிட்டால் இரவில் விழிக்கும்போதெல்லாம் பசி உணர்வு எட்டிப்பார்க்கும். போதுமான அளவு சாப்பிடாவிட்டால் உடலால் போதுமான அளவு ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது. அதனால் அதிகப்படியான அளவு பசி எடுக்கும். போதுமான அளவு தூங்கவில்லை என்றால் நன்றாக சாப்பிடவும் முடியாது.
உடற்பயிற்சி: அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் அடிக்கடி உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நிச்சயமாக உணர்வீர்கள். உடற்பயிற்சிக்கு ஏற்ப போதுமான உணவை குறிப்பிட்ட இடைவெளிக்குள் சாப்பிடவில்லை என்றால் பசி எட்டிப்பார்க்கும். உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு உண்ணும் உணவும் முக்கியமானது.
வேகமாக சாப்பிடுவது: வேகமாக சாப்பிடுவது சட்டென்று பசியை போக்கிவிடும். வயிறும் நிரம்பிவிடும். ஆனால் சில நிமிடங்கள் கழித்து பசி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உணவை மென்று மெதுவாக சாப்பிடுவதுதான் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவு: உணவில் உள்ள சர்க்கரையை குளுக்கோஸாக மாற்றும் திறன் உடல் அமைப்புக்கு இருக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தால் குளுக்கோஸ் எளிதில் உடலில் உள்ள செல்களை சென்றடையாது. சாப்பிடுவதை விட அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரிடும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அதிக அளவு சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு எழுந்து கொண்டிருக்கும். அத்துடன் கவலை, பதற்றம், உடல் பருமன் போன்ற அறிகுறிகளும் பசி உணர்வை தூண்டிக்கொண்டிருக்கும். இது நீரிழிவு, தைராய்டு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் அடிக்கடி பசி உணர்வு எழுந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
- அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.
- சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது தான் இந்த சிறுதானிய உணவுகளாகும். ஆனால் இன்று நாம் தான் நாகரீகம் என்ற பெயரில் பிட்சா, பர்கர் என்று மேலை நாட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டோம்.
கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும்.
சிறுதானியங்களில் அதிகமான அளவு நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடைய கிளைசீமிக் இன்டக்ஸ் மிகக் குறைவு. கிளைசீமிக் இன்டக்ஸ் என்பது ஒரு உணவை சாப்பிடும்போது எவ்வளவு வேகமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறதோ அதன் குறியீடு தான் கிளைசீமிக் இன்டக்ஸ். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, நாம் சாப்பிட்ட உடனே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறுதானியங்களை தினமும் உட்கொள்பவர்களுக்கு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 12 சதவிகிதம் குறைவதாகவும், உணவுக்குப் பின் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 15 சதவிகிதம் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் சிறு தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சர்க்கரை நோய் வருவதை தாமதப்படுத்தலாம். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.
சிறுதானியங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.
இந்த சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் இருதய நோய் பாதிப்புகள் குறைகிறது. சரும பிரச்சனைகள், முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை வருவதை தடுக்கவும் இந்த சிறுதானியங்கள் உதவுகின்றன. மொத்தத்தில் இந்த சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அழகினை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. இவை உங்களுக்கு அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
சிறுதானியங்களில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இது இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இந்த சிறு தானியங்களில் கால்சியம் உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.