search icon
என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கைகளால் வருடி கொடுத்த படி கொஞ்சினார்.
    • கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் . இவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கல்லூரி வளாகத்தில் நல்ல பாம்பு ஒன்று வந்தது. இதனைக் கண்ட நாகராஜ் பாம்பின் அருகில் சென்றார்.

    பாம்பு அதன் போக்கில் அருகில் உள்ள புதருக்குள் செல்ல முயன்றது. நாகராஜ் அதனை காலால் தடுத்து நிறுத்தி திசை திருப்பினார். இதனை கண்டதும் நல்ல பாம்பு படம் எடுத்து சீரியது. நாகராஜ் அதனை கைகளால் வருடி கொடுத்த படி கொஞ்சினார்.

    அங்கிருந்தவர்கள் பாம்பை தொட வேண்டாம் என நாகராஜை எச்சரிக்கை செய்தனர். ஆனால் விடாப்படியாக பாம்பை அங்கும் இங்கும் அலைக்கழித்தபடி கைகளை தடவி கொடுக்க முயற்சி செய்தார் .அப்போது பாம்பு அவரை கடித்தது. நாகராஜ் வழியால் துடித்தார். பாம்பு புதருக்குள் சென்று விட்டது.

    பொதுமக்கள் நாகராஜை உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகராஜ் குடிபோதையில் நல்ல பாம்புடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
    • மறுக்கும் மாணவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டு கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டம், நர்சராவ் பேட்டையில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.

    கல்லூரியில் தங்கியுள்ள 3-ம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

    அந்த வீடியோவில் 3-ம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வரிசையாக வரவழைத்து மெத்தையில் தலைக்குப்புற படுக்க சொல்கின்றனர். அப்படி படுக்க மறுக்கும் மாணவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டு கின்றனர்.

    பின்னர் மெத்தையில் படுக்கும் மாணவர்களை 4 சீனியர் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பிரம்பால் சரமாரியாக தாக்குகின்றனர். அடி வாங்கும் மாணவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாலும் கொடூரமான முறையில் தாக்குகின்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த 2 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நரசராவ பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 3 மாணவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த ராக்கிங் சம்பவம் அரசியல் கட்சியினர் இடையே வார்த்தை போரை ஏற்படுத்தி வருகிறது.

    • கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • அமலாக்கத் துறை உதவியுடன் விசாரணை நடத்தப்படும்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்பட்ட மது கொள்கை குறித்த வெள்ளை அறிக்கையை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிமுகப்படுத்திய மது கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏதும் இன்றி பணமாக மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.

    கஜானாவுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியதற்காக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் . ஜெகன் மோகன் ரெட்டியின் மதுபான கொள்கைக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிடும் .மேலும் அமலாக்க துறை உதவியுடனும் விசாரணை நடத்தப்படும்.

    போலி மது குடித்ததால் எத்தனை பேர் கடுமையான உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து கேட்கப்படும்.

    கடந்த ஆட்சியில் பிரபல பீர் வகைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. உள்ளூர் வகைப்பீர்கள் அதை அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சந்திரபாபு நாயுடுவின் இந்த திடீர் குற்றச்சாட்டால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பதியில் நேற்று 73,023 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு செய்தார்.

    அப்போது பக்தர்கள் குளிக்கும் அறைகளில் குழாய்கள் உடைந்து காணப்பட்டது. மேலும் மொட்டை அடிக்கும் இடம் சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டார்.

    இது குறித்து கல்யாண கட்டாவில் உள்ள அதிகாரியிடம் மொட்டை அடிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்த குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு தேவையான அளவு வெந்நீர் வழங்குவதற்காக பழுதடைந்த எந்திரங்களை மாற்றி விட்டு புதியதாக பொருத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பதியில் நேற்று 73,023 பேர் தரிசனம் செய்தனர். 26,942 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
    • நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய் தரம், மணம், சுவையில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

    இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

    • திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • 400 போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சுனில். இவரது நண்பர் குப்தா. இவர்கள் நேற்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் டிக்கெட் பெறுவதற்காக போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி உள்ளனர். இதனை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து தரிசனத்திற்கு வந்த சுனில் மற்றும் குப்தாவை விஜிலன்ஸ் அதிகாரிகள் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இருவரும் சுப்ரபாத சேவை டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்காக 400 போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    போலி ஆதார் அட்டைகள் மூலம் இதுவரை எத்தனை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர்.

    போலி ஆதார் அட்டை மூலம் தரிசன டிக்கெட் பெற்று வேறு நபர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதியில் நேற்று 71,939 பேர் தரிசனம் செய்தனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் நாராயணகிரி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது. பக்தர்களின் கூட்டம் குறைந்ததால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,939 பேர் தரிசனம் செய்தனர். 26,327 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்று இருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கி உள்ளது.

    அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. தரமற்ற நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேவஸ்தானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
    • தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதன்மை செயல் அலுவலராக சியாமளா ராவ் பதவி ஏற்றார். இவர் பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சியாமளா ராவ் அன்னதான கூடம், லட்டு தயாரிக்கும் இடம், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வரிசை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் பயன் பெறும் வகையில் தேவஸ்தானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. லட்டு மற்றும் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தில் தரம் மற்றும் சுவையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் தரிசன வரிசையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

    பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை பரிசோதித்து அங்கீகரிப்பதற்காக ஆய்வகம் அமைக்கப்படும். நாராயணிகிரி தோட்டத்தில் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் தங்கக்கூடிய வகையில் புதிய கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக தற்போது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் 1.05 லட்சத்தில் இருந்து 1.47 லட்சம் டோக்கன்களாக அதிகரிக்கப்படும்.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தனியாக 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் குழந்தைகளின் பசியை போக்க மீண்டும் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆர்ஜித சேவைகளில் முன்பதிவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 75, 963 பேர் தரிசனம் செய்தனர். 26, 956 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 16 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 65,134 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படிதேவஸ்தான அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வரவேண்டும். தினமும் அனைத்து ஆண் ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும். அதேபோல் பெண் ஊழியர்கள் இந்துக்களின் புடவை, ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும்.

    அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரையொருவர் மற்றும் பிறரை சந்திக்கும் போதெல்லாம் 'கோவிந்தா' அல்லது 'ஓம் நமோ வெங்கடேசாயா' என்று கூறி பின்னர் பேச தொடங்க வேண்டும்.

    இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 65,134 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26,100 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு நாளும் 100 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • திருப்பதியில் நேற்று 67 223 பேர் தரிசனம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் மதிப்பு கொண்ட விஐபி பிரேக் தரிசன டிக்கெட் ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் வழங்கி வருகிறது.

    இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாள் ஒன்றுக்கு 500 என்ற அடிப்படையிலும், கவுன்டர்களில் அங்கு வந்து கேட்கும் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர திருப்பதி விமான நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 100 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனத்தின் அடிப்படையில் தினமும் 2,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலா 10,500 ரூபாய் செலுத்தி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    திருப்பதி மலையில் உள்ள கவுன்டர்களில் கட்டுப்பாடு இல் லாமல் டிக்கட்டுகள் வழங்கப்படுவதால் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்களுக்கான தரிசன நேரம் வெகுவாக அதிகரித்தது. அதன் தாக்கம் சாதாரண பக்தர்கள் தரிசன நேரத்தை பாதிப்படைய செய்கிறது.

    எனவே இந்த மாதம் 22-ந்தேதி முதல் தினமும் திருப்பதி மலையில் உள்ள கவுன்டர்களில் 900 டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் 100 டிக்கெட்டும், ஆன்லைனில் 500 டிக்கெட்டுகளும் என மொத் தம் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மட்டுமே தினமும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித் துள்ளது.

    திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் நேற்று அங்குள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தினார். அப்போது ஒரு ஓட்டலில் தரமற்ற உணவு வினியோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

    அந்த ஓட்டல் சமையலறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.திருப்பதி மலையில் உள்ள ஓட்டல்கள் அனைத்திலும் தினமும் சோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

    திருப்பதியில் நேற்று 67 223 பேர் தரிசனம் செய்தனர். 24 549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கடந்த 6 மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ. 670.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

    • திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீதரை பிடித்து விசாரித்தனர்.
    • பறக்கும் படை அதிகாரிகள், ஸ்ரீதரை திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பக்தர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை டிக்கெட்டை அதிகாரிகள் வாங்கி சோதனை செய்தனர். ஆதார் அட்டையில் உள்ள முகமும், ஸ்ரீதரின் முகமும் ஒத்துப்போகவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீதரை பிடித்து விசாரித்தனர்.

    அவர், போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி குலுக்கல் முறை சேவையான சுப்ரபாத சேவை டிக்கெட்டை பெற 400 முன்பதிவுகள் செய்திருப்பதும், அதில் 20 முறை டிக்கெட்டுகளை வாங்கி சாமி தரிசனம் செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், ஸ்ரீதரை திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளில் வேறு யாரேனும் அவருடன் இணைந்து மோசடி செய்திருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×