search icon
என் மலர்tooltip icon

  உள்ளூர் செய்திகள்

  மயிலாப்பூருக்கு தனி பஸ் நிலையம் வேண்டும்- சட்டசபையில் மயிலை த.வேலு பேச்சு
  X

  மயிலாப்பூருக்கு தனி பஸ் நிலையம் வேண்டும்- சட்டசபையில் மயிலை த.வேலு பேச்சு

  • மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும், அறநிலையதுறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும்.
  • ஆர்.ஏ. புரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.

  சென்னை:

  சட்டசபையில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-

  மாநகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத்தை தாயுள்ளதோடு, பெண்களின் உணர்வுகளையும், சுமைகளையும் புரிந்து கொண்டு எந்த மாநிலமும் செய்யாத திட்டத்தை நம் முதல்வர் முன்மாதிரியாக செய்திருக்கிறார் அதுதான் "திராவிட மாடல் ஆட்சி" என்று சொல்லி எனது தொகுதியின் கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறேன்.

  கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு கலைஞருக்கு பிடித்த இடம் மெரினா கடற்கரை, மெரினா கடற்கரை ஓரமாக மீனவ குடியிருப்புகளை ஒட்டியுள்ள லூப் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் பெயரை சூட்ட வேண்டும்.

  நிறைவடையும் தருவாயில் உள்ள ஆர்.ஏ. புரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.

  எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் பேசி 30 மாதங்களில் கட்டி முடித்து தருகிறோம் என்று உறுதியளிக்கிறோம். ஆனால் அது சரியாக பின்பற்றபடவில்லை. காரணம் இன்றைய சூழ்நிலையில் வீட்டு வாடகை அதிக சுமையாக இருக்கிற காரணத்தால் மக்கள் கொந்தளிக்கின்றனர்.

  உதாரணம் தேனாம்பேட்டை வன்னியபுரம் காலி செய்து 11 மாதங்கள் ஆகியும் அடிக்கல் நாட்டப்படவில்லை அதேபோல், நாட்டான் தோட்டம், பருவா நகர், ஆண்டிமான்ய தோட் டம், பிள்ளையார் கோயில் தோட்டம், முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் வீட்டை காலி செய்துதர தயார் நிலையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்திட வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மயிலாபூருக்கு என்று ஒரு தனிபேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும் அறநிலையதுறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும்.

  மயிலாப்பூரில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வெங்கடேச அக்ரகாரம் சாலையில் உள்ள பழைய வணிகவளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் மற்றும் மல்ட்டி லவல் கார்பார்க்கிங் கட்டி கொடுத்தால் கோயிலுக்கு வருமானமும், மயிலாப்பூரில் போக்குவரத்து நெரிசலும் குறையும். கால்நடைகள் பராமரிக்க ஒரு தனி இடம் சென்னை மாநகராட்சி அமைத்துதர வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் வாடகையை பல மடங்கு உயர்த்திய காரணத்தால் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகமான நிலுவை தொகை கட்ட கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதற்கு அரசு ஒரு சரியான, சுமூகமான முடிவை ஏற் படுத்தி ஏழை மக்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

  மீனவ மக்கள் அதிகமாக வசிக்கும் வாரிய குடியிருப்பு பகுதியில் சிங்கார வேலவரின் மார்பளவு சிலை அமைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×