என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ராமநாதபுரம் உள்பட 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்21 Nov 2024 7:24 AM IST (Updated: 21 Nov 2024 7:24 AM IST)
- ராமநாதபுரத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரத்தில் முகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாம்பனில் அதிகபட்சமாக 28 செ.மீட்டர் மழை பெய்தது.
இன்று காலை வரை சில இடங்களில் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×