என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா - 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை:
கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Next Story