search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்சில் வாலிபர் மரணம்
    X

    சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்சில் வாலிபர் மரணம்

    • பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
    • உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது28) கொத்தனார்.

    இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக தனது தம்பி பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ரெயில் மூலம் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    பின்னர் அஜித்குமார் உள்பட 5 பேரும் அங்கிருந்து மாநகர பஸ்சில் செம்மஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்வந்து கொண்டு இருந்த போது திடீரென அஜித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பஸ்சிலேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்டு உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்குள் அஜித்குமார் பரிதாப இறந்துபோனார். இதனால் அவரது உடல் பஸ்நிறுத்தத்தில் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த உடன் வந்தவர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் உடனடியாக வரவில்லை.

    இதன் காரணமாக பஸ் நிறுத்தத்திலேயே அஜித் குமாரின் உடல் கிடந்தது. காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் அந்த பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தனர். அவர்களும் அருகில் இறந்தவர் உடல் கிடப்பதை கண்டு எந்த சளனமும் இல்லாமல் அருகிலேயே நின்றபடி வரும் பஸ்களில் ஏறிச்சென்றனர். சிலர் வேடிக்கை பார்த்த படி சென்றனர். அருகில் அழுது கொண்டிருந்த அஜித்குமாரின் தம்பி பிரேம் குமார் மற்றும் உடன் வந்தவர்களுக்கு உதவயாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் காலை 11 மணியளவில் செம்மஞ்சேரி போலீசார் வந்து இறந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்தவர் உடலை மீட்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அஜித்குமார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×