search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெப்பக்காடு முகாமில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 26 கேமிராக்கள் பொருத்தம்
    X

    தெப்பக்காடு முகாமில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 26 கேமிராக்கள் பொருத்தம்

    • புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக முகாமை சுற்றிலும் 26 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • புலியின் நடமாட்டம் இருக்கிறதா என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் யானைகள் முகாம் உள்ளது.

    இங்குள்ள வளர்ப்பு யானைகளை பழங்குடியின மக்கள் பராமரித்து வருகின்றனர்.

    முகாமை சுற்றி பல ஆண்டுகளாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த மாரி(61) என்ற பெண் விறகு சேகரிக்க காட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியை தேடி காட்டுக்குள் சென்றனர். அப்போது யானைகள் முகாமில் இருந்து 200 அடி தூரத்தில் மாரியின் சடலம் மீட்கப்பட்டது.

    புலி தாக்கி இறந்ததற்கான அடையாளங்கள் அவரது கழுத்தில் இருந்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் தமிழ்நாடு-கர்நாடகா சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக முகாமை சுற்றிலும் 26 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதில் புலியின் நடமாட்டம் இங்கு இருக்கிறதா என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகாமை சுற்றிலும் 26 கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    கேமிராவில் புலி பதிவான பின்புதான், அது வயதானதா? அல்லது ஊனம் ஏதாவது ஏற்படுள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.

    அதன்பின்பு புலியை பிடிப்போம். கடந்த நவம்பரில் பொம்மன் என்ற வேட்டைதடுப்பு காவலரை லைட்பாடி என்ற இடத்தில் புலி தாக்கியது. அதன்பின்னர் புலி அங்கு வரவே இல்லை. இது அந்த புலிதானா என்பது விரைவில் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×