search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தேன் எனும் அமிர்தம்
    X

    தேன் எனும் அமிர்தம்

    • தேன் என்பதற்கு அமிர்தம் என்ற ஒரு பெயரும் உண்டு.
    • தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும்.

    தேனைவிட இனிய பொருள் ஒன்று இல்லை! தேன் என்பதற்கு அமிர்தம் என்ற ஒரு பெயரும் உண்டு.

    மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை பருகி தன் உடம்பிலுள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்ளும். அது மாறுதலடைந்த பிறகு தேனீக்கள் உமிழ்ந்து அறைகளில் சேர்த்து வைக்கின்றன. இதுதான் தேன் என்னும் அமிர்தமாகிறது.

    தேனில் வைட்டமின் சத்துக்களும், உலோக சத்துக்களும் நிறைந்துள்ளன. தேன் சாப்பிட்ட 5 மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். ஆகவேதான் அது உடம்புக்கு உடனடி பலனை, பலத்தை கொடுக்கிறது.

    குழந்தைகளுக்கு இருமல் வந்தால் 50 மில்லி தேனுடன் அதே அளவு எலுமிச்சை பழரசம் சேர்த்து கலந்து குடிக்க கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.

    பார்லி அரிசி கஞ்சியின் தெளிந்த நீருடன் தேன் சேர்த்து குடிக்க கொடுத்து வந்தால் செரியாமை, இருமல், தொண்டைப்புண், நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

    வயதானவர்களுக்கு வரக்கூடிய கோழையை அகற்றுவதற்கும், உடம்பில் வெப்பத்தை உண்டுபண்ணுவதற்கும், தெம்பு கொடுப்பதற்கும் தேன் நல்லதொரு நிவாரணியாகும்.

    பெண்களின் மார்பக காம்புகளில் வரக்கூடிய ரத்தக்கட்டு, புண் மற்றும் பால் கட்டி போன்றவற்றுக்கு தேனை அதன்மீது பூசி வருவதால் குணமாகும்.

    முகத்தில் கருமை நிறம் மற்றும் கோடு, புள்ளி ஆகியவற்றின்மீது தேனை தடவி வெந்நீரால் கழுவினால் குணமாவதோடு நல்ல வசீகரம் கிடைக்கும்.

    -மரிய பெல்சின்

    Next Story
    ×