என் மலர்
இந்தியா
ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா.. விலை உயர்வுக்கு ரெடியாகும் நிறுவனங்கள்
- 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.
புதுடெல்லி:
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.
2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.
கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.