என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
தோல்விக்கு முழு பொறுப்பும் நானே: ரோகித் சர்மா
- இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது சாதாரண விஷயமல்ல. இந்தத் தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம்.
இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. அதேபோல் நியூசிலாந்து அணி எங்களை விடவும் மிக சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
தொடர்ச்சியாக நிறைய தவறுகளை செய்தோம். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் 28 ரன்கள் முன்னிலை பெற்றோம்.
அதேபோல் 2வது இன்னிங்சிலும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதாக சேஸ் செய்யப்படக் கூடியதுதான். ஆனால் ஒரு அணியாகவே நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது, விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.
அதுதான் எங்களின் மனநிலையாக இருந்தது. ஆனால் அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் எனக்காக ஒரு திட்டம் வகுத்து விளையாடினேன். அதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை.
இந்த பிட்சில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவித்து வருகிறோம்.
இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
சீனியர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் ஒவ்வொரு மைதானத்தில் விளையாடுகிறோம்.
இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் முயற்சித்த எந்த விஷயமும் கைகூடவில்லை. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்