search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. ஒன்றிணைய மொட்டையடித்துக்கொண்ட தொண்டர்
    X

    அ.தி.மு.க. ஒன்றிணைய மொட்டையடித்துக்கொண்ட தொண்டர்

    • அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டியில் தேர்தலை சந்தித்தனர். இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தே.மு.தி.க.வுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்.டி.பி.ஐ. 1 என 7 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

    இதில் அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து இருந்தார். இவரைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. வினர் ஒன்றிணைய அழைப்பு விடுத்திருந்தார்.

    இவரது அழைப்பை நிராகரித்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.-க்கு அழைப்பு விடுக்க தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை என்று தெரிவித்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடைந்தது எதிரொலியாக, கட்சி ஒன்றுபட வேண்டும் என்று கூறி அதிமுக தொண்டர் மொட்டையடித்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இதுகுறித்து பேசிய அதிமுக தொண்டர், "அதிமுக கட்சி ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அன்போடு எடப்பாடி பழனிசாமி, தங்கமணி அண்ணன் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×