search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களை இயக்க அரசு திட்டம்- தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
    X

    தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களை இயக்க அரசு திட்டம்- தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

    • தீபாவளிக்கான தனியார் பஸ் ஒன்றுக்கு 1 கி.மீ.-க்கு ரூ.51.25 கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
    • கிடைக்கும் வருவாயை விட ரூ.3000 வரை தனியாருக்கு கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    தீபாவளியையொட்டி தனியார் பஸ்களையும் வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

    தீபாவளியை முன்னிட்டு தேவைக்கேற்ப தனியார் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    அரசின் இந்த முடிவிற்கு சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் கூறுகையில்,

    * தீபாவளிக்கான தனியார் பஸ் ஒன்றுக்கு 1 கி.மீ.-க்கு ரூ.51.25 கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    * அனைத்து இருக்கைகளும் நிரம்பினாலும் இல்லாவிட்டாலும் ரூ.51.25 கொடுக்க வேண்டும்.

    * அரசு பஸ் ஒன்று 1 கி.மீ. ஓடினால் சராசரியாக ரூ.32 வருவாய் கிடைக்கும்.

    * அரசு பஸ் வருவாய் ரூ.32, தனியார் பஸ் செலவு ரூ.51.25.

    * அரசு பஸ்சை ஒப்பிடுகையில் தனியாருக்கு கூடுதலாக ரூ.19 அரசு கொடுக்கிறது.

    * சென்னை-திருச்சிக்கு அரசு பஸ் முழுவதும் நிரம்பினால் ரூ.28,600 வருவாய் கிடைக்கும்.

    * தனியார் பஸ் ஒன்றுக்கு அரசு கொடுக்க உள்ள தொகை ரூ.32,000.

    * கிடைக்கும் வருவாயை விட ரூ.3000 வரை தனியாருக்கு கூடுதலாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    * தனியார் நிறுவனங்கள், கூடுதல் பஸ்களை இயக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

    * தனியார் பஸ்களில் பயணிகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தனியாருக்கு பணம்.

    * சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும்போது கூட்டம் இல்லை என்றால் என்ன நிலை?

    * தனியாருக்கு கொடும் பணத்தை அரசு பஸ்களுக்கு கொடுத்தால் என்ன?

    அரசிடம் கூடுதல் பஸ்கள் இருக்கும்போது தனியார் பஸ்கள் ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Next Story
    ×