search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    Supreme Court judge Shamsuddin Chowdhury Manik
    X

    இந்தியாவுக்கு தப்பி செல்ல முயற்சி... வங்கதேச உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கைது

    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.

    ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×