search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 66.85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஐ-போன் விற்பனை
    X

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 66.85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஐ-போன் விற்பனை

    • இந்தியாவில 2023-24 நிதியாண்டில் 8 பில்லியன் டாலருக்கு ஐபோன் விற்பனை.
    • சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா 2023-2024 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 66,858.92 கோடி ரூபாய்) என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 6 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு மடங்கு (சுமார் 33 சதவீதம்) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐ-போன் விற்பனையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாகியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியுளள்து.

    மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டபுள் டிஜிட் வளர்ச்சி என டிம் குக் தெரிவித்திருந்தார். மேலும் இது எங்களுக்கு மிக மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.

    உலகளவில் ஐ-போன் விற்பனை மூலம் 383 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர் என்பது குறைவானதுதான். சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி முக்கியமானது எனக் கருதுகிறது.

    இந்தியாவுக்கு 9.2 மில்லியன் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×