search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரூ. 5,999 விலையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ரூ. 5,999 விலையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • போக்கோ C61 ஸ்மார்ட்போன் 10 வாட் சார்சிங் வசதி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனத்தின் C61 ஏர்டெல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வெளியிட போக்கோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

    புதிய போக்கோ C61 மாடலில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த MIUI ஓ.எஸ். கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 5MP முன்புற கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் போக்கோ C61 ஸ்மார்ட்போன் 10 வாட் சார்சிங் வசதி கொண்டுள்ளது.


    போக்கோ மற்றும் ஏர்டெல் கூட்டணி காரணமாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் 50 ஜிபி வரை இலவச டேட்டா பெற முடியும். இத்துடன் ரூ. 750 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். மேலும் ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் தள்ளுபடி பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் போக்கோ C61 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், பயனர்கள் இந்த ஸ்மார்ட்போன் வாங்க ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அதன்படி இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    போக்கோ C61 ரெகுலர் வெர்ஷன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் டைமண்ட் டஸ்ட் பிளாக், எதிரியல் புளூ மற்றும் மிஸ்டிக்கல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஏர்டெல் எடிஷன் விற்பனை நாளை (ஜூலை 17) மதியம் துவங்குகிறது.

    Next Story
    ×