search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதியுடன் உருவாகும் புது ஸ்மார்ட்வாட்ச்
    X

    ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதியுடன் உருவாகும் புது ஸ்மார்ட்வாட்ச்

    • இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆம்பியன்ட் லைட் சென்சார் கொண்டுள்ளது.
    • இதன் வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்படுகிறது.

    நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் சிஎம்எப் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 என்ற பெயரில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில், புதிய சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடலில் 1.32 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆட்டோ பிரைட்னஸ் அட்ஜஸ்ட் வசதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமியினம் அலாய் பாடி கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்படுகிறது.


    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த வாட்ச் கழற்றி மாற்றக்கூடிய பெசல்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதுவரை வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிளாஸி கேஸ் மற்றும் ஆரஞ்சு லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சிஎம்எப் வாட்ச் ப்ரோ மாடலின் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், புதிய சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடலின் விலையும் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டிலேயே நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×