search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    உங்களிடம் பல சிம் கார்டுகள் இருக்கா... 2 லட்சம் அபராதம், சிறைக்கு செல்ல நேரிடும் என்பது தெரியுமா?
    X

    உங்களிடம் பல சிம் கார்டுகள் இருக்கா... 2 லட்சம் அபராதம், சிறைக்கு செல்ல நேரிடும் என்பது தெரியுமா?

    • தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு.
    • 10 சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் பல சிம் கார்டுகளை வைத்திருப்பது இயல்பாகி விட்டது. ஆனால் அதிக சிம் கார்டுகளை ஒருவர் வைத்திருப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

    2023 ஆம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு மேல் சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒரு நபர் 6 சிம் வைத்திருக்க மட்டுமே அனுமதி உண்டு.

    உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

    Next Story
    ×