search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மஹிந்திராவின் அசத்தலான இரு எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்கள் - அறிமுகம் எப்போ தெரியுமா?
    X

    மஹிந்திராவின் அசத்தலான இரு எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்கள் - அறிமுகம் எப்போ தெரியுமா?

    • மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் மாடலை லண்டனில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் யூரோப் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் பிப்ரவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்கள் XUV.e மற்றும் BE பிரிவுகளின் கீழ் வரிசைப்படுத்தப்பட உள்ளன. மஹிந்திரா XUV.e பிரிவின் கீழ் இரண்டு மாடல்களும் BE பிரிவின் கீழ் மூன்று மாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன. இரு மாடல் பிரிவுகளும் முற்றிலும் பிரத்யேக டிசைன் மொழி மற்றும் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருகின்றன. XUV.e பிரிவில் உள்ள மாடல்களின் உற்பத்தி டிசம்பர் 2024 வாக்கில் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 2025 வாக்கில் BE பிரிவு மாடல்களின் உற்பத்தி துவங்க இருக்கிறது.

    IC என்ஜின் மாடல்களில் மஹிந்திராவின் XUV பிராண்டு மிகவும் பிரபலம் ஆகும். தற்போது எலெக்ட்ரிக் பிரிவிலும் இதே நிலையை அடைய மஹிந்திரா பணியாற்றி வருகிறது. XUV சீரிசில் உள்ள டுவின் பீக் லோகோ காப்பர் ஃபினிஷ் மஹிந்திரா XUV400 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. XUV.e8 மாடல் ஏற்கனவே மஹிந்திரா விற்பனை செய்து வரும் XUV700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

    இதைத் தொடர்ந்து XUV.e9 மாடல் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் ஆகும். இது கூப் போன்ற டிசைன் கொண்ட மஹிந்திரா XUV9 உற்பத்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. மஹிந்திராவின் BE ரக எலெக்ட்ரிக் வாகனம் 2025 வாக்கில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வித்தியாசமான சி வடிவ எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் ஷார்ப் கட் பாடி சர்ஃபேஸ் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×