search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது
    • இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விஸ்மி குணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அட்டப்பட்டு 63 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் அடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது.

    நாளை நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. 

    • நடப்பு டி.என்.பி.எல். தொடரில் முதல் சதமடித்தார் ஷிவம் சிங்
    • சுரேஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    விமல் குமார் 23 ரன்னிலும், பாபா இந்திரஜித் 29 ரன்னிலும், சரத் குமார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பொறுப்புடன் ஆடிய ஷிவம் சிங் 56 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது. நடப்பு தொடரில் முதல் சதமடித்த ஷிவம் சிங் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்து மதுரை அணி தோல்வியடைந்தது.

    சிறப்பாக விளையாடி சதமடித்த திண்டுக்கல் வீரர் ஷிவம் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் போட்டிகளுக்கு திண்டுக்கல் அணி தகுதி பெற்றது.

    • டாஸ் வென்ற மதுரை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 201 ரன்களை குவித்தது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    விமல் குமார் 23 ரன்னிலும், பாபா இந்திரஜித் 29 ரன்னிலும், சரத் குமார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பொறுப்புடன் ஆடிய ஷிவம் சிங் 56 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது. நடப்பு தொடரில் முதல் சதமடித்த ஷிவம் சிங் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • பெரும்பாலான வீரர்கள், குறிப்பாக ஒயிட் பால் வடிவத்தில் ஐபிஎல் அணிகளில் ஒரு பகுதியாக இருந்ததை அறிந்திருப்பார்.
    • நீங்கள் முதிர்ச்சியடைந்தவர் என்று நினைத்தாலும், சில புதிய யோசனைகளிலிருந்து நீங்கள் பயனடையலாம்.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர் குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    கம்பீர் சமகாலத்தவர் (விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் விளையாடியவர்). அவர் ஐபிஎல்-லில் ஒரு சிறந்த சீசனைக் கொண்டிருந்தார் (2024 சீசனில் கேகேஆர் இவரது தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது). இளமையாக இருக்கும் அவருக்கு சரியான வயது என்று நான் நினைக்கிறேன். அவர் புதிய ஐடியாக்களுடன் வருவார்.

    அவர் பெரும்பாலான வீரர்கள் குறிப்பாக ஒயிட் பால் வடிவத்தில் ஐபிஎல் அணிகளில் ஒரு பகுதியாக இருந்ததை அறிந்திருப்பார். எனவே இது புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

    கம்பீரை எங்களுக்கு தெரியும். அவர் ஒரு முட்டாள்தனம் கொண்டவர் அல்ல. அவர் ஐடியாக்களை கொண்டிருப்பார். அவருக்கு நல்ல விஷயம் என்னவென்றால், அவர் ஒரு முதிர்ந்த அணியைப் பெற்றுள்ளார். அவர் ஒரு செட்டில் செய்யப்பட்ட அணி, ஒரு முதிர்ந்த அணியைப் பெற்றுள்ளார். நீங்கள் முதிர்ச்சியடைந்தவர் என்று நினைத்தாலும், சில புதிய யோசனைகளிலிருந்து நீங்கள் பயனடையலாம். எனவே இது சுவாரஸ்யமான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 140 ரன்களை எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • 46 வயதான வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
    • 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பெய்லிஸ் இருந்து வந்தார். அவருடைய இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வாசிம் ஜாபரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    46 வயதான வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். 2022 ஐபிஎல் ஏலத்திற்க முன்னதாக பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

    2014-ல் இருந்து பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது, 2024 சீசனில் 262 இலக்கை எட்டி, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்னை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றது.

    உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளராக பெய்லிஸ் இருந்தார். மேலும் இரண்டு முறை கேகேஆர் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் பஞ்சாப் அணிக்காக அவரால் கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை.

    • மகாராஜா டிராபி என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் இந்திய உள்நாட்டு டி20 போட்டியாகும்.
    • சமித் டிராவிட்டை மைசூர் வாரியர்ஸ் அணி 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது.

    மகாராஜா டிராபி KSCA T20 என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் இந்திய உள்நாட்டு டி20 போட்டியாகும். லீக் போட்டியில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.

    குல்பர்கா மிஸ்டிக்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், மைசூர் வாரியர்ஸ், மங்களூர் டிராகன்கள், ஷிவமொக்கா சிங்கங்கள் ஆகிய அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.

    இந்த தொடருக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகனான சமித் டிராவிட்டை மைசூர் வாரியர்ஸ் அணி 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது. 

    18 வயதான இவர் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் மட்டும் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடுகிறார். இவர் கருண் நாயர் தலைமையில் மைசூர் அணிக்காக விளையாட உள்ளார். மைசூரு அணியில், கே.கௌதம் மற்றும் ஜே.சுசித் போன்ற ஆல்ரவுண்டர்களை முறையே ரூ.7.4 லட்சத்துக்கும், ரூ.4.8 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ரூ. 1 லட்சத்திற்கு ஏலம் போனார்.

    2023-24 கூச் பெஹார் டிராபியை வென்ற கர்நாடகா 19 வயதுக்குட்பட்ட அணியில் சமித் டிராவிட் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார்.
    • கவூர் 3415 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

    இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஷபாளி வர்மா 26 ரன்னிலும் மந்தனா 55 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 55 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) மற்றும் கவூர் (3415) ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

    • டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
    • ரோகித் தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பெயர் அதிகமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயமடைவதால் அவரை கேப்டனாக அறிவிக்க முடியாது என தேர்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில போட்டிகள் மட்டுமே கேப்டனாக பணியாற்றிய சூர்யகுமாரை நியமித்தது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நான் தான் எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளிப்படையாக பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து பும்ரா கூறியதாவது:-

    நான் தான் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன். சில போட்டிகளில் நானும் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதே சமயம் இங்கே மகத்தான கேப்டன்களும் உள்ளனர். இருப்பினும் நான் என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வேன்.

    இந்தியாவுக்காக அறிமுகமான போது எம்எஸ் டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார். எனர்ஜியால் செயல்படக்கூடிய விராட் கோலி ஆர்வத்துடன் பிட்னஸை பின்பற்றுமாறு தள்ளினார். ரோகித் சர்மா வீரர்களின் உணர்வுகளை அறிந்து அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து உதவினார்.

    அந்த வகையில் அனைவரும் இந்திய அணி முன்னோக்கி செல்வதற்கு உதவினர். குறிப்பாக ரோகித் சர்மா இளம் வீரர்களிடம் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகுவார். குறிப்பாக அவர் இளம் வீரர்களை நாம் அணியில் இல்லை என்று நினைக்க விட்டதில்லை. எனவே ரோகித் சர்மா கேப்டனாக கிடைத்ததற்கும் அவருடைய தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கருதுவேன்.

    என பும்ரா கூறினார்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 80 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 81 ரன்களை எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடினர். ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

    ஸ்மிரிதி மந்தனா 55 ரன்னும், ஷபாலி வர்மா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • வங்காளதேசம் தரப்பில் நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்தார்.
    • இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று 2 அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீராங்கனைகளாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். முதல் ஓவரில் அக்டர் 6 ரன்னிலும் 3-வது ஓவரில் முர்ஷிதா 4 ரன்னிலும் அடுத்து வந்த இஷ்மா தன்ஜிம் 8 ரன்னிலும் ரேணுகா சிங் பந்து வீச்சில் வெளியேறினர்.

    இதனை தொடர்ந்து ருமானா அகமது 1, ரபேயா கான் 1, ரிது மோனி 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் 50 கடக்க உதவினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்களாதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் பட்டியலில் 4-வது இடத்தில் மந்தனா உள்ளார்.
    • இந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்தால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறுவார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.

    இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் மந்தனா (3378) 27 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடிப்பார்.

    மேலும் 37 ரன்கள் எடுத்தால் சக அணி வீராங்கனையாக கவூரை (3415) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடிப்பார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

    ×