search icon
என் மலர்tooltip icon

    குஜராத்

    • ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
    • விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார்.

    குஜராத் மாநிலம் வதோதராவில் குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியதில் 9 மாத கர்ப்பிணியின் குழந்தை பிறக்கும் முன்பே இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ரவி தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் அந்த பைக்கின் மீது மோதியது.

    இந்த விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார். ரவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் அவர்களின் 6 வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
    • வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.

    குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

    வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

    வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
    • விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங் ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவ மாணவர்களின் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு மாணவர்கள் 4 பேரையும் ரகசியமான இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    • பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
    • முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.

    அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.

    அதன்பேரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

    அந்த வகையில் இந்த வழக்குகளில் ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் உள்பட மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.

    ஜார்கண்டின் பொகாரோ நகரை சேர்ந்த குமார், பீகாரின் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அதே போல் வினாத்தாள்களை திருடி கசியவிடுவதில் குமாருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங்கை ஹசாரிபாக்கில் கைது செய்தோம்" என கூறினார்.

    • வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த பழைய கார் 73 வருட பாரம்பரியம் கொண்டது. அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை பயணம் சென்று லண்டனை அடைந்துள்ளனர். 2½ மாத பயணம் மேற்கொண்ட அந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனை அடைந்த போது தங்களது வெற்றிப்பயணம் தொடர்பாக ஒரு வீடியோ தயாரித்து உள்ளனர்.

    இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுடன் தமன் தாக்கூரின் பதிவில், இது மிகவும் உணர்ச்சிகரமான பயணம். 73 நாட்களில் 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர்கள் பயணத்தின் போது பல்வேறு இடங்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வைரமானது எஸ்கே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
    • சுமார் 20 கைவினைஞர்களால் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட வைரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைரம் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த கைவினைஞர்கள் 8 காரட் வைரத்தில் பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வைரம் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

    இந்த வைரமானது எஸ்கே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் மேலாளர் கூறுகையில், வைரமானது ஆரம்பத்தில் 40 காரட் லெப்ரான் வைரம். இருப்பினும் வடிவத்திற்காக வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட பிறகு அதன் அளவு 8 காரட்டாக குறைக்கப்பட்டது

    மேலும் இந்த வைரமானது 'மேக் இன் இந்தியா' பாணியில் உருவாக்கப்பட்டதாகவும், அது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் மேலாளர் கூறினார்.

    சுமார் 20 கைவினைஞர்களால் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட வைரம் தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கண்காட்சியை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வியும் பார்வையிட்டார். கண்காட்சியில் இந்த நகை ஒரு கவர்ச்சி பொருளாக மாறியது.

    • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
    • இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும்.

    மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை-அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

    இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும். இந்த 12-ல், 8 ரெயில் நிலையங்கள் குஜராத்திலும், 4 ரெயில் நிலையங்கள் மகாராஷ்டிராவிலும் இருக்கும். இந்த ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களுடன் பயணிக்க தோராயமாக 2.07 மணிநேரம் எடுக்கும், மொத்த நிறுத்தங்களுடன் 2.58 மணிநேரம் ஆகும்.

    புல்லட் ரெயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து, மேல்கட்டமைப்புகள் கட்டும் பணி மேம்பட்ட நிலையில் உள்ளது.

    குஜராத்தில் அமைந்துள்ள வாபி, பிலிமோரா, சூரத், ஆனந்த், அகமதாபாத் ஆகிய 5 புல்லட் ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன . இந்த புல்லட் ரெயில் நிலையங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    • நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
    • நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலுக்காக 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கலேஷ்வர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அங்கலேஷ்வரில் உள்ள ஒரு ஓட்டலில், ரசாயனத் துறையில் பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனம் வாக்-இன் நேர்காணலை ஏற்பாடு செய்தது.

    பி.இ உட்பட பல்வேறு தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ சான்றிதழ்களில், ஷிப்ட் இன்சார்ஜ், பிளாண்ட் ஆபரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக்கல் ஃபில்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகள் போன்ற பதவிகளுக்கு கோரப்பட்டது.

    இந்த நெரிசலான கூட்டத்தின்போது, ஓட்டலின் வாயிலில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிடி கம்பி அழுத்தம் தாங்காமல் உடைய, அங்கிருந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவம் நடந்த போதிலும், நிறுவனத்தை அணுகுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும், இந்த கூட்டம் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் 2 மாத வீட்டு வாடகையை செலுத்த தவறியதால் வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    வீட்டின் உரிமையாளர் ஜெயேந்திர மானவவாலா, ராதே நகர் சொசைட்டியில் அவருக்கு சொந்தமான வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெண்ணுக்கு எதிராக அவரும் புகார் கொடுத்துள்ளார்.

    • அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்
    • ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'அரசியல் ஆதாயத்துக்காக பாஜக முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே குஜராத்திலும் மோடியை முறியடிப்போம்' என்று தெரிவித்தார்.

    கடந்த நூற்றாண்டின் இறுதியில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி உள்ளிட்டோர்  உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம், கலவரங்களின் மூலம் பாபர் மசூதியை இடிக்கப்படும் அளவுக்கு சென்றது.

    அன்று முதல் புகைந்து கொண்டிருந்த இந்த ராமர் கோவில் இயக்கத்தில் முக்கிய கட்டமாக கடந்த 2014 ஆம் ஆனது மக்களவைத் தேர்தலில் பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் காட்டுவோம் என்று வாக்குறுதியுடன் வெற்றி பெற்று அமைந்த மோடி தலைமையிலான பாஜக அரசால் மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியது.

    அதன்விளைவாக 1800 கோடி செலவில் மத்திய பாஜக அரசால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக ராமர் கோவிலை திறந்தது தேர்தல் ஆதாயத்துக்கான நகர்வாக எதிர்கட்சிகலால் குற்றம் சாட்டப்பட்டது.

    ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்.மேலும் பாஜகவின் கோட்டையாக விளங்கிய அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெருமபான்மை வெற்றியை பெற்றது.

    இந்த பின்னணியிலேயே ராமர் கோவில் இயக்கம் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர்  சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து விபத்துக்குள்ளானது.

    குஜராத்தின் டாங் மாவட்டத்தில் இன்று 64 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    சொகுசுப் பேருந்து சூரத்தில் இருந்து சபுதாராவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை 5 மணியளவில், மலை நகரமான சபுதாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இதில், படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த மற்ற நபர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

    • ப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
    • இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பயங்கர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வேறுயாரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். இந்த கட்டிடங்களில் 5 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

    2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், வெறும் 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×