என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி பாதுகாப்பு கருத்துரை வழங்கினார்.
இயற்கை இடர்பாட்டால் ஏற்படும் மின்தடையை சரி செய்ய ஊழியர்களுக்கு அறிவுரை
- நெல்லை நகர்ப்புற மின்கோட்டத்தில், பெருமாள்புரம் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விநியோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது சம்பந்தமாக நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி பாதுகாப்பு கருத்துரை வழங்கினார்.
- மின் நுகர்வோர்களிடம் இணையவழி மின்கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில், பெருமாள்புரம் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விநியோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது சம்பந்தமாக இன்று பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி பாதுகாப்பு கருத்துரை வழங்கினார்.
மேலும் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 16,939 நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவாக மேற்கொண்டு 30-ந்தேதிக்குள் பணிகளை முடித்த பெருமாள்புரம் உதவி செயற்பொறியாளர் சின்னசாமி மற்றும் பணியா ளர்களுக்கு நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மின் நுகர்வோர்களிடம் இணையவழி மின்கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இயற்கை இடர்பாடுகளால் மின் தடைகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார்.