என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் பைப்.
மின் வசதி இல்லாததால் இயங்காமல் உள்ள போர்வெல் சீரமைக்கப்படுமா?
- ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அங்கிருந்து குடிநீர் மேலத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போ ர்வெல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு போதிய மின் வசதி இல்லாத காரணத்தால் போர்வெல் பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.
இதனால் ஊராட்சி பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இருப்பினும் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்க எதுவாக மாவட்ட ஊராட்சி சார்பாக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.
இந்த இடத்தில் போதிய மின் வசதி இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படாமல் போர்வெல் இயங்காமல் உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேல தெருவில் இருந்து மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.