search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு பயிற்சி
    X

    ஓட்டல் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

    சேலத்தில் நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு பயிற்சி

    • சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வேலு உத்தரவின் பேரில், நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தீ விபத்து ஏற்படும் போது, அதை தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    Next Story
    ×