search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    தொழுநோய் விழிப்புணர்வு போஸ்டரை நாமக்கல் மாவட்ட தொழுநோய் பிரிவு இணை இயக்குனர் மருத்துவர் ஜெயந்தினி வெளியிட்ட காட்சி. அருகில் கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் வடிவேலு, வேர்டு செயலாளர் சிவகாமல்லி ஆகியோர் உள்ளனர்.

    தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • வேலூர் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பாக கபிலர்மலை சமுதாயக் கூடத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பாக கபிலர்மலை சமுதாயக் கூடத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.வேர்டு செயலாளர் சிவகாமவல்லி வரவேற்று பேசினார். இணை இயக்கு னர் (தொழுநோய்) டாக்டர் ஜெயந்தினி தொழுநோய் என்பது என்ன? எப்படி பரவும்? இதற்கான அறிகுறிகள் என்ன? இவர்களுக்கு என்ன சிகிச்சை வழங்கப்படும்? வழங்கப்படும் உதவிகள் என்னென்ன என்பது பற்றி எடுத்துரைத்தார்.

    கபிலர்மலை ஊராட்சி மன்றத் தலைவர் வடிவேலு முன்னிலை வகித்தார். கபிலர்மலை முருகேசன், திருநாவுக்கரசு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் ஆகியோர் முற்றிலும் தொழுநோய் குணப்படுத்தக்கூடிய கூட்டு மருந்து சிகிச்சை பற்றியும், இவர்கள் உண்ண வேண்டிய ஊட்டச்சத்து குறித்தும், 15 நாள் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தெளிவுபட எடுத்துரைத்தனர். பின்னர் அனைவரும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இறுதியாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இணை இயக்குனர் (தொழுநோய்) நாமக்கல் டாக்டர் ஜெயந்தினி விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டார். கள்ளிப்பட்டி பவினேஷ் கர்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வேர்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×