search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு
    X

    தஞ்சாவூரில் நடந்த பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார். அருகில் நிர்வாகிகள் உள்ளனர். 

    பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு

    • பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
    • தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சா வூரில் நடந்தது. இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை தலைமையேற்ற பின் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. சாதாரண மக்களும் பா.ஜ.க.வின் கொள்கை களை புரிந்து கொள்ளும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பாமர மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மிக எளிய தலைவராக இருந்து மக்கள் பயன்பெறும் வகையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 590 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றி ரண்டு வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது.

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வு குறித்தும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை விளக்கி பேசி வருகிறார். இந்தியாவில் 3-வது முறையாகவும் மோடி பிரதமராவது உறுதியாகி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் செலவுகள் அதிகம் ஏற்பட்டு அரசு பணிகள் செய்வதில் தொய்வு ஏற்படு கிறது. எனவே பாராளு மன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அதனை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கள் பாரம மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வாறு தேர்தல் நடக்கும் பட்சத்தில் இந்தியா வல்லரசாவது உறுதி. தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஜீ, பொருளாதார பிரிவு துணைத்தலைவர்கள் டாக்டர்கள் தேவ்ஜில், நாகராஜன் மற்றும் வெங்கடேஷ், ராஜசேகர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×