என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் ரூ.3 கோடியே 70 லட்சத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
ரூ.3 கோடி மதிப்பில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்: பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் பொது மக்களும், அலுவலர்களும் அவதி அடைந்து வந்தனர்.
- சீர்காழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 கோடியே மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் பொது மக்களும், அலுவலர்களும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சீர்காழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் பூமி பூஜையில் பங்கேற்று பணியினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ரவி, நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.