என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
- கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மாக்காய்குளம் கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த ராமச்சந்திரன் என்பவரை முன்விரோதம் காரணமாக அதே தெருவில் வசிக்கும் செல்லதுரை மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அரியலூர் சாலை, ராமலிங்கபுரம் பாரத் காஸ் கிடங்கு அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொலை செய்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரை உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ராமனை விரைந்து கைது செய்ய, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளா தேவி, மங்களமேடு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று குன்னம் காவல்நிலையம் அருகே ராமனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.