search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்து   விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்: புதுச்சேரி முன்னாள் அமைச்சர்  மலக்கண்ணன் தகவல்
    X

     காரைக்கால் திருநள்ளாறு தேரடி அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்து விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மலக்கண்ணன் தகவல்

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கண்டன உரையாற்றினார்.


    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காரைக்கால் திருநள்ளாறு தேரடி அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில், திருநள்ளாறு கொம்யூன் முன்னாள் தலைவர் சிங்காரவேலு, மகிளா காங்கிரஸ் மாநில பொது செயலாளர் நிர்மலா, இளைஞர் அணி தலைவர் ரஞ்சித், திருநள்ளாறு தொகுதி தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின் முடிவில், முன்னாள் அமைச்சர் கமல க்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- 4 தலைமுறைகளாக இந்தியாவிற்காக தியாகம் செய்த அரசியல் வாரிசான இளம் தலைவர் ராகுல்காந்திய அப்புறப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த பலர், பல வகைகளில் இறங்கி பார்த்தார்கள். முடியாமல், இப்போது, திட்டமிட்டு சிறை தண்டனை வழங்கியும், எம்.பி பதவி நீக்கம் செய்தும் புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து, ராகுல் காந்தியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற வன்ம எண்ணத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார். ஜனநாயகத்தின் குரல்வ லையை நெறிக்கும் பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது, இத்தகைய ஜனநாயக விரோத செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். என்றார்.

    Next Story
    ×