search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
    X

    போட்டியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×