என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில வாலிபர் கொலையில் பள்ளி மாணவர்கள் 7 பேர் கைது
    X

    வடமாநில வாலிபர் கொலையில் பள்ளி மாணவர்கள் 7 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரமேஷ் மண்டல் வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரில் தொழிலாளர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.
    • கைதான மாணவர்கள் 7 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    வேளச்சேரி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் மண்டல் (வயது29). இவர் வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரில் தொழிலாளர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 27-ந்தேதி மாலை ரமேஷ் மண்டல் சக தொழிலாளர்களுடன் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார். அப்போது வாலிபர்கள் சிலர் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடனமாடினர்.

    அப்போது ஒருவரது கால் அவ்வழியே வந்த தொழிலாளி ரமேஷ் மண்டல் மீது பட்டது. இதனை அவர் கண்டித்து பையில் வைத்திருந்த முருங்கைக்காயால் நடனம் ஆடியவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் ரமேஷ் மண்டலை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் மண்டல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை தொடர்பாக வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரமேஷ் மண்டலை தாக்கிய பள்ளி மாணவர்களான 16 வயதுக்குட்பட்ட 7 பேர் மற்றும் தரமணியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், கல்லுக்குட்டையை சேர்ந்த அரிகரன் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

    கைதான மாணவர்கள் 7 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×