என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பிரிந்து சென்ற மனைவி வர மறுத்ததால் துயரம்

    திருச்சி:

    திருச்சி மண்ணச்சநல்லூர் பேரமங்கலம் மரியம் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் ராகுல் (வயது 23). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஓராண்டு காலம் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ராகுலின் மனைவி அவரைப் பிரிந்து சென்று விட்டார்.

    பின்னர் பலமுறை மனைவியை குடும்பம் நடத்த வருமாறு ராகுல் அழைத்து வந்தார். ஆனால் அவர் செவிமடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    ஆனால் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ராகுல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆட்டு கொட்டகையில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ராகுலின் தாயார் சரோஜா புலிவலம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×