search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுத்தர மக்கள், ஊதியம் பெறுவோர் சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக பட்ஜெட் உள்ளது
    X

    நடுத்தர மக்கள், ஊதியம் பெறுவோர் சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக பட்ஜெட் உள்ளது

    • ஆசிரியர் கூட்டமைப்பு அறிக்கை
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாது:-

    பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2023-24 நிதியாண்டிலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    கடந்த 9 ஆண்டுகளாக மாற்றப்படாத வருமான வரி உச்சவரம்பு, வரும் நிதியாண்டில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்தாண்டும் பழைய வரிமுறையில் எந்த மாற்றமும் செய்யாமல் புதிய வரிமுறை உச்சவரம்பில் சில மாற்றங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் சேமிக்கும் பழக்கம் நடுத்தர வர்கத்தினரிடையே முற்றிலும் போக்கிடும் வகையில் அமைந்துள்ளது. சேமித்தால் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    கடந்த ஆண்டு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நிதியமைச்சகத்திற்கு நாங்கள் சமர்பித்த கோரிக்கை மனுவில் தனிநபர் வருமான வரி வரம்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனவும், வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும் என நிதியமைச்சத்திற்கு சமர்பித்தோம்.

    மேலும் 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 3 லட்சமாக உயர்த்த கோரினோம்

    ஆனால் புதிய வரி விதிப்பில் புதிதாக இணைபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை. புதிய வரி விதிப்பில் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த அரசு முன்மொழிந்துள்ளது.

    நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி வரம்பு குறித்து புதிய அறிவிப்பு கடந்த பல ஆண்டுகளாக மாற்றம் அறிவிக்காமல் இருந்து தற்போது சிறிய மாற்றம் மட்டுமே அளித்திருப்பது மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    எனவே ரூபாய்.5இலட்சம் முதல் 7.5இலட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5% வரியும் 7.5முதல் 10இலட்சம் ரூபாய் வரை 10% வரியும் ரூபாய் 12.5 இலட்சத்திற்கு மேல் 15 இலட்சம் வரை 20% சதவிகித வரியும் 15 இலட்சத்திற்கும் அதிகாமான வருமா னத்திற்கு 30 சதவிகிதம் வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவிக்க கோருகின்றோம்.

    வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.

    80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 3 லட்சமாக உயர்த்த வேண்டும்.

    இந்திய மொத்த வருவாயில் ஜி.டி.பி. 6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×