என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது
  X

  வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • ஒளிமதி ஓடத்துறை பஸ் நிறுத்தப் பகுதியில் வேகமாக வந்த லோடு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

  திருவாரூர்:

  நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது ஒளிமதி ஓடத்துறை பஸ் நிறுத்தப் பகுதியில் வேகமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது. பின்னர் லோடு வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

  இதில் அவர் ஓடத்துறை தெற்குத் தெருவைச் சேர்ந்த கவின்ராஜ் (வயது34) என்பதும், வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி லோடுவேனில் மணல் அள்ளி சென்றதும் தெரியவந்தது.

  இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர். மேலும் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×