search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    உண்டி சுருங்கின்..
    X

    உண்டி சுருங்கின்..

    • உடலிற்கு பாரத்தை நாம் கொடுக்கிறோம்..
    • மனதிற்கு கவலையை உடல் கொடுக்கிறது.

    மனம் நோகாமல்

    வாழ வேண்டுமென்றால்..

    உடல் நோகாமல்

    பராமரிக்கப்பட வேண்டும்!

    உள்ளுறுப்புகளில்

    எந்தவொன்று பாரமாயினும்..

    அது உணர்ச்சிகளின் வழியாக

    மனதைப் பாதிக்கிறது

    இயற்கையின் இக்கூற்றின்படி..

    கவலையெனும் உணர்ச்சி

    வயிறெனும் உறுப்போடு

    தொடர்பாக்கப்பட்டிருக்கிறது

    என்றால்..

    எப்போதும் நம் மனம்

    கவலையோடிருக்கிறதெனில்..

    எப்போதும் நம் வயிறு

    பாரத்தோடிருப்பதாக பொருள்

    உடலிற்கு பாரத்தை

    நாம் கொடுக்கிறோம்..

    மனதிற்கு கவலையை

    உடல் கொடுக்கிறது..

    தேவைக்கதிகமான

    உணவால் ஏற்பட்டக் கழிவு

    மனதின் கவலையாகி

    வெளிப்படுகிறது..

    கவலையும் கூட

    கழிவு வெளியேற்றமே..

    கவலையே கூடாதென்றால்

    கழிவே கூடாது!

    கவலைப்படாதீர்கள்

    என்பதைக்காட்டிலும்..

    ஆகச்சிறந்த ஆலோசனை

    உங்கள் உடலைக் கவனியுங்கள்

    என்பதுதான்..!

    "உண்டி சுருங்கின்

    உபாயம் பல உள"

    என்றிருக்கிறார்களே..!

    -அன்பு வேல் முருகன்

    Next Story
    ×