என் மலர்

  இந்தியா

  திருமணத்திற்கு வற்புறுத்தியதால் பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை- ஆட்டோ டிரைவர் கைது
  X

  திருமணத்திற்கு வற்புறுத்தியதால் பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை- ஆட்டோ டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜாபர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
  • ஜாபர் வாலி மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து புக்கராயபுரம் போலீசில் புகார் செய்தனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

  பக்கத்து ஊரான நடிமி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் வாலி. ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

  இந்த நிலையில் ஆசிரியை அடிக்கடி ஜாபர் வாலி ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தபோது இருவருக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

  ஜாபர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை ஜாபர் வாலியை வற்புறுத்தி வந்தார்.

  இதனால் ஜாபர் வாலி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதையடுத்து ஆசிரியை ஜாபர் வாலி வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.

  அப்போது ஆசிரியையை தனியாக அழைத்து வந்த ஜாபர் வாலி உன்னை இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி வழக்கமாக இருவரும் சந்திக்கும் புக்க ராயபுரம் சாய்பாபா கோவில் குளத்தின் அருகே அழைத்துச் சென்றார்.

  பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். ஆசிரியையின் உடைகளை கழற்றி பாறைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு உடலை நிர்வாணமாக குளத்தில் வீசினார்.

  அவரது செல்போனை எடுத்து அவரது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் நான் ஜாபர் வாலியை காதலித்தேன். அவரும் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

  இதனால் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டோம். ஆனால் ஜாபர் வாலி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எல்லோருக்கும் குட் பாய் அக்கா என தகவல் அனுப்பினார்.

  வாட்ஸ் அப்பில் வந்த தகவலை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஜாபர் வாலி மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து புக்கராயபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் ஜாபர் வாலியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஆசிரியையை பலாத்காரம் செய்து கொலை செய்து நிர்வாணமாக குளத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

  பிணத்தை குளத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கொலை செய்து குளத்தில் வீசி 20 நாட்கள் ஆனதால் அவரது உடல் முழுவதும் சிதைந்து காணப்பட்டது.

  இதையடுத்து சர்வஜனா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர்வாலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×